ARTICLE AD BOX
பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்!
அன்பார்ந்த வாசகர்களே!
உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்படவுள்ளன.
பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, உங்களின் மொபைல் போன் மூலம் பதிவு செய்யுங்கள். அதற்கு, இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்தால் போதும்.
அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரப்படி, இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான பிரார்த்தனைகள், அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், தமிழகத்தின் வழிபாட்டுச் சிறப்பு மிக்க ஆலயங் களில் சமர்ப்பிக்கப்படும்.
18.3.25 முதல் 31.3.25 வரை பிரார்த்தனைக்குப் பதிவு செய்ய வேண்டிய கடைசித் தேதி: 10.3.25

திண்டிவனம் இறையானூர் மங்களநாதர் ஆலயம்
18.3.25 முதல் 31.3.25 வரையிலும் சுப நிகழ்வுகள், இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனைகள், திண்டிவனம் இறையானூர் மங்களநாதர் ஆலயத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. சிவாலயத்தில் மூத்ததான உத்திரகோசமங்கைக்கு நிகரான தலம் மங்களபுரி எனும் இறையானூர்; அம்பிகை மங்களாம்பிகை. நடுநாட்டில் அகத்தியரால் எழுப்பப் பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள்.
18 சித்தர்களால் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட கால பைரவர் இங்கு ‘கால சங்கார மூர்த்தியாக’ அருளுகிறார். இவரை வழிபட்டால் யம பயம் நீங்கும் என்கிறார்கள். துர்வாசரால் சாபம் பெற்ற இந்திரன் இங்கு வந்து பலன் அடைந்தார் என தலவரலாறு கூறுகிறது. இந்திரன் இங்கு வந்து வழிபட்டு அழகும் இளமையும் பெற்றதால், இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுவோருக்கு தேகபலமும் பொலிவும் கிட்டும். மேலும் சரும நோய்கள் உள்ளவர்களும் இங்கு வந்து வணங்கி பலன் பெறலாம் என்கிறார்கள். வாசகர்கள் சகல சௌபாக்கியங்களைப் பெற்று வாழவும், அவர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறவும் வேண்டி வாழ்த்துப் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன!