பேங்க் ஆஃப் இந்தியா வேலை வாய்ப்பு; 400 பணியிடங்கள்; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

4 hours ago
ARTICLE AD BOX

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியாவில் (Bank of India) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 400 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.03.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Apprentice

காலியிடங்களின் எண்ணிக்கை: 400

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

வயதுத் தகுதி: 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

ஊக்கத்தொகை: ரூ. 10,000 - 15,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பொது அறிவு அல்லது வங்கி சார்ந்த கேள்விகள், கணிதம் மற்றும் திறனறி, ஆங்கிலம் மற்றும் கணினி ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு 100 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேர கால அளவில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nats.education.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.03.2025

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.800. எஸ்.சி /எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ.600, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 400

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

Read Entire Article