ARTICLE AD BOX
சென்னையில் உள்ள ஓட்டேரி, பாஷ்யம் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் அக்பர் (வயது 33). இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர், அப்பகுதியில் செயல்பட்டு வரும் சிக்கன் கடையில், டெலிவரி ஊழியராக வேலை பார்க்கிறார்.
சம்பவத்தன்று மதுரவாயல் பகுதியில் இருந்து டெலிவரி செய்வ திருமங்கலம் வழியே சென்றுகொண்டு இருந்தார். அப்போது, கடந்த பிப்.16 அன்று பெண் ஒருவரை சாலையோரம் பார்த்துள்ளார். அவரிடம் சென்று விசாரித்தபோது, சில குடும்ப பிரச்சனை தொடர்பாக அவர் பேசி இருக்கிறார்.
பின், பெண் பூஜை செய்தால் குடும்ப பிரச்சனை தீர்ந்துவிடும் என கூறி ரூ.38 ஆயிரம் ஜிபெ வாயிலாக பெற்றுக்கொண்டார். மேலும், வீட்டில் இருக்கும் தங்கம், வெள்ளி பொருட்கள் வேண்டும் என்றும், அதனை பூஜை முடிந்தபின் தந்துவிடுவேன் என கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: ரவுடி ராஜாவை சுற்றிவளைத்து கொடூர கொலை செய்த கும்பல்; சென்னையில் பரபரப்பு.!
நகைகள் மாயம்
இதனை நம்பிய அக்பர் 1.5 சவரன் நகை, 300 கிராம் வெள்ளி பொருட்களை மனைவிக்கு தெரியாமல் எடுத்து கொடுத்துள்ளார். கடந்த 3 நாட்களாக பூஜை செய்வதாக கூறிய பெண்மணி, பை ஒன்றை கொடுத்து அதில் நகை இருக்கிறது.
3 நாட்களுக்கு பின் திறந்து பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். 3 நாட்கள் காத்திருந்து, பின் அக்பர் நகையை பார்த்தபோது, அதில் நகை இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நபர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி செங்குன்றம், நேதாஜி நகரில் வசித்து வரும் விஜயலட்சுமி (வயது 45) என்பவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: சொல்லச்சொல்ல கேட்காத பெற்றோர்.. 38 வயது ஆசிரியை விபரீத முடிவு.. கண்ணீரில் பெற்றோர்.!