வெக்கைல இரவு நிம்மதியா தூங்க முடியலயா? ஆழ்ந்த தூக்கத்திற்கு சூப்பர் டிப்ஸ்!

5 hours ago
ARTICLE AD BOX

கோடைகால வெயிலால் இரவு நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்படுகிறீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும்.

Sleeping Tips During Summer : நல்ல தூக்கம் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே முக்கியமானது. நிம்மதியாக தூக்கம் இல்லாவிட்டால் பல வகையான உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் தற்போது கோடை காலம் ஆரம்பம் ஆகிவிட்டதால், கடுமையான வெப்பம் பகல் மட்டுமின்றி இரவு நேரத்திலும் நிலவி வருகின்றது. இதனால் இரவு நேரத்தில் சரியாக தூங்கக்கூட முடியாமல் போகிறது. எல்லாருடைய வீட்டிலும் ஏசி இருப்பதில்லை என்பதால், அவர்களால் இரவு சரியாக தூங்க முடியாமல் போராடுகின்றனர். அதிலும் குறிப்பாக பகலில் வேலை செய்பவர்கள் இரவில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் கோடை வெப்பத்தால் தூங்குவது சிரமமாக உணர்வார்கள். கோடை வெப்பத்தின் காரணமாக பலரும் தூக்குமின்மை பிரச்சனைகள் அவதிப்படுகின்றனர். இதனால் உடல் மட்டுமல்ல மன ஆரோக்கியமும் பாதிக்கப்படும். அந்த வகையில் நீங்களும் கோடை ஏற்பட்டால் இரவு சரியாக தூங்க முடியாமல் அவதிப்படுகிறீர்கள் என்றால், நிம்மதியாக உறங்க சில டிப்ஸ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தூங்கும் அறையை கூலாக வைத்துக் கொள்ளுங்கள்

நீங்கள் இரவு தூங்கும் அறையை வெப்பம் இருப்பதை தவிர்க்க, தூங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன் பேன் அல்லது ஏசியை ஆன் செய்யவும். இதனால் பெட்ரூம் குளிர்ச்சியாக இருக்கும். மற்றொரு வழி என்னவென்றால், பிரிட்ஜில் பல மணி நேரம் இருக்கும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து அதை ஃபேனுக்கு நேராக அல்லது ஜன்னல் இருக்கும் இடத்தில் வைத்தால் தூங்கும் அறை கூலாக இருக்கும்.

தரமான மெத்தை

கோடை வெப்பத்திலும் இரவு நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால், நீங்கள் தூங்கும் மெத்தை தரமானதாக இருக்க வேண்டும். அதாவது லைட்டான, வெப்பத்தை குறைக்க கூடிய நல்ல மெத்தையை பயன்படுத்த வேண்டும்.

தூங்கும் முன் குளி!

பகல் வேளையில் நீங்கள் கடினமாக உழைப்பதால், அதுவும் வெப்ப தாக்கத்தின் காரணமாக உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும். எனவே உங்கள் உடலில் இருந்து வெப்பநிலையை குறைக்க இரவு தூங்கும் முன் குளிர்ந்த நீரில் குளித்தால், நிம்மதியாக தூக்கம் வரும்.

இரவு நேரத்தில் வயிறு முட்ட ஒரு போதும் சாப்பிட வேண்டாம். அதுபோல காரமான உணவுகள் சாப்பிடுவதையும் தவிர்க்கவும். இல்லையெனில் உங்களது தூக்கம் பாதிக்கப்படும்  எனவே இரவு தூங்கும் முன் லைட்டான உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள். அப்போதுதான் உங்களால் இரவு நிம்மதியாக தூங்க முடியும்.

இதையும் படிங்க:  இரவு படுத்தவுடனே தூக்கம் வர வேண்டுமா? இந்த '5' மட்டும் செய்தால் போதும்!!

உடலை நீரேற்றமாக வை!

கோடை கால வெப்பத்தை சமாளிக்க உங்களது உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள். அதுபோல இரவு தூங்குவதற்கு முன் அதிகமாக தண்ணீர் அல்லது வேறு எந்த பானத்தையும் குடிக்க வேண்டாம். இல்லாவிட்டால் உங்களது தூக்கம் சீர்குலைந்து விடும். மேலும் இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க தூண்டும்.

இதையும் படிங்க: இரவு தூக்கம் வராமல் அவதிப்படுறீங்களா? இந்த '6' உணவுகள் சாப்பிடுங்க.. நல்லா தூக்கம் வரும்!

இரவு தூங்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மொபைல், லேப்டாப் மற்றும் டிவி பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் தூக்கம் பாதிக்கப்படும். எனவே தூங்கும் முன் டிஜிட்டல் ஸ்கிரீன் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் ஒரே நேரத்தில் தூங்கி எழுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் உங்களது தூக்கம் பாதிக்கப்படாது மற்றும் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

Read Entire Article