ARTICLE AD BOX
ஒரு ஊர்ல நல்ல செல்வ செழிப்போட ஒரு
பண்ணையார் இருந்தார்..
அவரோட பண்ணை வீடு , தோட்டம் , பண்ணையில்
இருக்குற பறவை
விலங்குகள் என எல்லாத்தையும்
பார்த்துக்குற வேலையாள் ஒரு நாள் காலையில அவர பார்க்குறதுக்கு
பதட்டத்தோட வந்து இருந்தான்…
பண்ணையார்க்கு அவன் வந்த தகவல் சொன்னதும், கொஞ்சம் நேரம் கழித்து அவரும் வர்றாரு..
பண்ணையார் வந்தத பார்த்ததும்
“வணக்கம் ஐயா”ன்னு சொல்றான்..
உடனே பண்ணையார் , “என்றா இந்த பக்கம் என்னாச்சு என்ன விஷயமா
வந்திருக்க? காசு எதாவது வேணுமா ? வீட்ல விசேஷமா?” ன்னு கேட்குறாரு…
அந்த வேலைக்காரன் “அதுலாம் இல்லைங்க ஐயா…” ன்னு கொஞ்சம்
பயத்தோட பேச்ச இழுக்க…
“டேய் சொல்றா ?? என்றா விசேஷம்” ன்னு
திரும்ப பண்ணையார் கேட்டதும்,
” ஐயா நம்ம பண்ணை வீட்ல வளர்த்த கிளி செத்துருச்சு” ன்னு சொல்றான்.
இத கேட்ட பண்ணையார்க்கு இப்போ ஒரு அதிர்ச்சி …
“அடேய்… எப்படிடா என்னோட கிளி செத்துச்சு ? அத ஆசையா வேற நாட்டுல இருந்து வாங்கிட்டு
வந்தேனே உயர்ந்த ரக கிளிடா அது” ன்னு பண்ணையார் உணர்ச்சி பொங்க கேட்குறாரு வேலைக்காரன் கிட்ட.
அதுக்கு வேலைக்காரன் , “ஐயா அந்த கிளி இறைச்சி சாப்பிட்டு இறந்து போச்சு” ன்னு சொல்லுறான்..
பண்ணையார்க்கு செம கோவம் “கிளிக்கு யாருடா இறைச்சியை
கொடுத்தது” ன்னு கேட்குறாரு ?
“அது நம்ம பண்ணையில செத்து போன குதிரையோட இறைச்சிய சாப்பிட்டு அதுவே இறந்துருச்சு” ன்னு
வேலைக்காரன் சொல்றான்..
இப்ப பண்ணையாருக்கு
இன்னும் ஒரு அதிர்ச்சி ..
“எந்த குதிரையடா சொல்லுற?” ன்னு
கொஞ்சம் கோவமா கேட்க ..
அதுக்கு வேலைக்காரன்,
” ஐயா நீங்க போன வருஷம் அரபு நாட்டுல இருந்து வாங்கிட்டு வந்தீங்களே
அந்த குதிரைதான் இறந்து
போச்சு” ன்னு தன் முகத்த சோகமா வச்சிக்கிட்டு சொல்றான்..
“என் குதிரை எப்படி செத்துச்சு” ன்னு பண்ணையார் கேட்க..
” ஐயா அந்த குதிரை தண்ணி வண்டிய இழுக்க முடியாம இழுத்து செத்து போச்சு” ன்னு
வேலைக்காரன் சொல்றான்..
“தண்ணி வண்டியா…??? அது
எதுக்கு” ன்னு திரும்பவும் அதிர்ச்சியா பண்ணையார் வேலைக்காரன்கிட்ட
கேட்குறாரு ..
“நம்ம பண்ணை வீடு எரிஞ்சு
போச்சுங்க ஐயா அத அணைக்கதான் தண்ணி வண்டிய எடுத்துட்டு
வந்தோம்னு” வேலைக்காரன்
திருதிருனு முழிச்சிட்டே சொல்றான்.
பண்ணையாருக்கு இப்ப லைட்டா நெஞ்சு வலியே வந்திருச்சு..
“எப்படிடா என்னோட பண்ணை வீடு எரிஞ்சது” ன்னு ?? திரும்ப அவன்கிட்ட கேட்குறாரு பண்ணையார்..
அதுக்கு அந்த வேலைக்காரன் ” ஐயா நேத்து ராத்திரி விறகுலாம் சேர்த்து கொளுத்தும் போது பரவுன தீ நம்ம வீட்டையும் பதம் பார்த்திருச்சு” ன்னு
கொஞ்சம் பயத்தோடு சொல்றான்..
பண்ணையாருக்கு இப்ப செம
கோவம்..உடனே வேலைக்காரன பார்த்து ” நம்ம பண்ணை வீட்டுல தான் கரண்ட் இருக்கே அப்புறம்
எதுக்குடா விறகுங்கள போட்டு கொளுத்துன” ன்னு கஷ்டத்தோட நெஞ்ச
பிடிச்சிட்டே கேட்குறாரு ??
அதுக்கு வேலைக்காரன், “ஐயா 2 நாளுக்கு முன்னாடி இரவு நேரத்துல நம்ம பண்ணை வீட்டுல திருடன்
வந்துட்டான்” ன்னு சொல்றான்..
“அதுக்கும் வீடு எரிஞ்சதுக்கும் என்றா சம்மந்தம்” ன்னு பண்ணையார் செம
கோவமா கேட்குறாரு..
” ஐயா திருடன் தான் வந்துட்டான்னு நெனச்சு உங்க அம்மா… அதான் நம்ம எஜமானிய நானே என் கையால
கொன்னுப்புட்டேனுங்க.. அவங்கள எரிக்க தான் விறகுகளை போட்டு
கொளுத்தினேன் வீடும் எரிஞ்சி போயிருச்சு” ன்னு… கதறி கதறி
பண்ணையார் கால்ல விழுந்து அழுகுறான் வேலைக்காரன்..
இத கேட்ட பண்ணையார்
நெஞ்ச புடிச்சிக்கிட்டே இவன பார்த்து ” டேய் யார்டா நீ இப்படி ஓவர் நைட்டுல எல்லாரோட சோலியும்
முடிச்சிட்டியேடா” ன்னு சொல்லிக்கிட்டே
மயக்கம் போட்டு கீழ விழுறாரு
பண்ணையார்..
வாழ்க்கையில எதிர்பாராததை
எதிர்பாருங்கள்
எவன் வேணாலும் நம்ம சோலிய எப்ப வேணாலும் முடிச்சிருவான் நாம தான் உஷாரா இருங்க..