ARTICLE AD BOX
STR 49 திரைப்படம் கமல்ஹாசனின் ஹிட் படம் ஒன்றைப்போல் உருவாகும் என தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் 2025 ஜூன் 5 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் சிம்பு, பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக STR 49 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடியனாக நடிக்கிறார் என செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கயடு லோஹர் நடிக்க உள்ளார் எனவும் சீதாராமம் பட நடிகை மிர்ணாள் தாகூர் பேராசிரியையாக நடிக்க உள்ளார் எனவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. மேலும் STR 49 படத்தின் படப்பிடிப்பு மற்றும் பூஜை ஏப்ரல் மாதம் நடைபெறும் என சொல்லப்படுகிறது. அதே சமயம் இப்படத்தை இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
“We searched for many directors for #STR49 & #SilambarasanTR suggested Ramkumar🤝. It will be a bang on Mass & Fun film like Vasool raja MBBS (Munna Bhai)😀🔥. It’s fully a college based film. Casting is going to be very exciting🌟”
– Producer Aakashpic.twitter.com/zF0ALvRLHq
— AmuthaBharathi (@CinemaWithAB) March 22, 2025
இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படமானது கமல்ஹாசனின் வசூல்ராஜா MBBS படத்தை போல் உருவாக உள்ளது என இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தில் நடந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் வசூல்ராஜா MBBS படத்தில் ரௌடியாக இருக்கும் கமல் MBBS படிக்கும் மாணவனாக நடித்திருப்பார். STR 49 படத்தில் ரௌடியாக இருக்கும் சிம்பு, கல்லூரி மாணவன் அல்லது பேராசிரியராக மாறுவது தான் படத்தின் கதையாக இருக்கும் என பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.