வாழைப்பழம் அழுகும் நிலைக்கு வந்து விட்டதா? அதில் பனானா மஃபின் செய்து விடலாமே

6 hours ago
ARTICLE AD BOX

அழுகும் நிலைக்கு வந்த வாழைப்பழங்களை தூக்கி எறிவதற்குப் பதிலாக, ஒரு அற்புதமான வால்நட் பனானா மஃபினை செய்து பாருங்கள். சாஃப்டாக, சற்று மொறு மொறுப்பாக இருக்கும் இந்த கேக்கை சாப்பிட்டு விட்டு, இது வாழைப்பழத்தில் செய்து என சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்கள். இது ஆரோக்கியமான மற்றும் சத்துள்ள ஸ்நாக்காகவும் இருக்கும். 

தேவையான பொருட்கள்:

பழுத்த வாழைப்பழம் - 2 (நன்கு மசித்தது)
கோதுமை மாவு - 1 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
உப்பு - சிட்டிகை
வெண்ணெய் - 1/4 கப் (உருகியது)
பால் - 1/4 கப்
முட்டை - 1
வென்னிலா எஸென்ஸ் - 1 டீஸ்பூன்
வால்நட் - 1/2 கப் (நறுக்கியது)

உணவில் உப்பை குறைக்க சொல்லி விட்டாரா டாக்டர்? கவலையை விடுங்க...உப்புக்கு மாற்றாக இந்த பொருட்கள் இருக்கே

செய்முறை:

- ஓவன் தயாரிப்பதற்கு ஓவனை 180°C வரை முன்பொகச் சூடாக்கவும். மஃபின் மோல்ட்களை சிறிது வெண்ணெய் தடவி தயார் செய்யவும்.
- கேக் கலவை தயார் செய்வதற்கு ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- வெளிப்புற கலவை செய்வதற்கு மற்றொரு பாத்திரத்தில் மசித்த வாழைப்பழம், சர்க்கரை, உருகிய வெண்ணெய், முட்டை, வென்னிலா எஸென்ஸ், பால் சேர்த்து நன்கு whipping செய்யவும்.
-  இப்போது உலர்ந்த மாவு பொருட்கள் கலவையை மெதுவாக வாழைப்பழ கலவையில் சேர்த்து, ஒரு கரண்டியால் மெல்ல கலக்கவும். இதில் நறுக்கிய வால்நட் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
- தயார் செய்யப்பட்ட மாவை மஃபின் மோல்ட்களில் 3/4 பகுதி வரை நிரப்பி விடவும். அப்போது தான் மஃபின் உப்பி வருவதற்கு ஏற்றதாக இருக்கும். 
- மஃபின்களை 20-25 நிமிடங்கள் 180°C இல் பேக் செய்யவும். மேலே அழகாக பொன்னிறமாக மாறினால், அது வெந்துவிட்டதாக அர்த்தம்
- ஓவனில் இருந்து எடுத்த பிறகு முழுமையாக குளிர்ந்த பிறகு, இந்த வால்நட் பனானா மஃபினை பரிமாறலாம்

காலையில் வெறும் வயிற்றில் செவ்வாழை சாப்பிட்டால்... நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்க

சிறப்பு குறிப்புகள்:

- அதிக குளிர்ச்சி தன்மை வேண்டும் எனில், சூடாக பரிமாறும் முன், 10 நிமிடம் ஃபிரிட்ஜில் வைத்து பரிமாறலாம்.
- தேவையானால், டார்க் சாக்லேட் சிப் சேர்த்து கூட சுவை கூட்டலாம்.
- இந்த மஃபின் சாப்பிட குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும்.
- இப்படி வாழைப்பழங்களை வீணாக்காமல், சுவையான வால்நட் பனானா மஃபினை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.
- வாழைப்பழம், வால்நட், முட்டை போன்ற பொருட்கள் கலந்திருப்பதால் இது ஆரோக்கியமானதாகவும், நிறைவான ஸ்நாக்காகவும் இருக்கும்.
- மாலையில் பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கு பாலுடன் சேர்த்துக் கொடுத்தால் நீண்வ நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

Read Entire Article