4,189 கிமீ! 74 மணி நேரம் பயணம்! 9 மாநிலங்கள்! இந்தியாவில் நீண்ட தூரம் செல்லும் ரயில் இதுதான்!

3 hours ago
ARTICLE AD BOX

 Longest distance train in India: இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ரயிலில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அதுவும் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிமாக உள்ளது. ரயில் போக்குவரத்து நாட்டின் முதுகெலும்பாக உள்ள நிலையில், இந்தியாவில் நீண்ட தூரம் செல்லும் ரயில் குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

அசாம் மாநிலம் திப்ரூகாரில் இருந்து தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வரை இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸே (Vivek Express) இந்தியாவில் நீண்ட தூரம் செல்லும் ரயில் ஆகும். விவேக் எக்ஸ்பிரஸின் முதல் சேவை நவம்பர் 19, 2011 அன்று தொடங்கப்பட்டது. முதலில் வாரத்துக்கு 2 நாட்களாக இயக்கப்பட்ட இந்த ரயில், பின்பு வாரத்துக்கு 4 நாட்கள் இயக்கப்பட்டது. இப்போது தினமும் இயக்கப்படுகிறது.

திப்ரூகார்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (kanyakumari to dibrugarh Vivek Express)

திப்ரூகார்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் மொத்தம் 4,189 கி.மீ தூரம் பயணிக்கிறது. 
இந்த ரயில் அசாம் முதல் தமிழ்நாடு வரை என ஒன்பது மாநிலங்கள் வழியாக பயணிக்கிறது. மொத்தம் 4,189 கி.மீ தூரத்தை திப்ரூகார்-கன்னியாகுமரியை 74 மணி நேரத்திலும், மறுமார்ர்க்கமாக கன்னியாகுமரி‍ திப்ரூகாரை 75:25 மணி நேரத்திலும் இந்த ரயில் கடக்கிறது.

இந்த ரயில் தற்போது தூரம் மற்றும் நேரம் இரண்டிலும் நாட்டின் மிக நீளமான ரயில் பாதையாகும். திப்ருகர்-கன்னியாகுமரி‍‍‍-திப்ருகர் விவேக் எக்ஸ்பிரஸ் 22 பெட்டிகளைக் கொண்டுள்ளது - 1 ஏசி டூ டயர், 4 ஏசி த்ரீ டயர், 11 ஸ்லீப்பர் வகுப்பு, 3 பொது பெட்டிகள், 1 பேன்ட்ரி கார் மற்றும் 2 பவர் கம் லக்கேஜ் ரேக்குகள் உள்ளன. திப்ருகரில் இருந்து கன்னியாகுமரிக்கு ஏசி டூ டயரில் பயணிக்கும் பயணிகள் தலா ரூ.4,450 செலுத்த வேண்டும். ஏசி த்ரீ டயர் மற்றும் ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்கும் பயணிகள் முறையே ரூ.3,015 மற்றும் ரூ.1,185 செலுத்த வேண்டும்.

திப்ருகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் நிறுத்தங்கள்:‍

நியூ டின்சுகியா சந்திப்பு, நஹர்கட்டியா, சிமாலுகுரி சந்திப்பு, மரியானி சந்திப்பு, ஃபர்கேட்டிங் சந்திப்பு, திமாபூர், திபு, லும்டிங் சந்திப்பு, ஹோஜாய், ஜாகி சாலை, குவஹாத்தி, கோல்பாரா டவுன், நியூ பொங்கைகான், கோக்ரஜார், நியூ அலிபுர்துவார், நியூ கூச் பெஹார், ஜபாகனங்கூரி சாலை மால்டா டவுன், ராம்பூர் ஹாட், பர்தமான் சந்திப்பு, தன்குனி, காரக்பூர் சந்திப்பு, பலேஷ்வர், பத்ரக், கட்டாக், புவனேஸ்வர், குர்தா சாலை சந்திப்பு, பிரம்மபூர், பலாசா, ஸ்ரீகாகுளம் சாலை, 

விசாகப்பட்டினம், துவ்வாடா, சமல்கோட் சந்திப்பு, ராஜமுந்திரி, ஒன்லூரு, விஜயவாடா சந்திப்பு, ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, சேலம் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, திருப்பூர், கோயம்புத்தூர் சந்திப்பு, பாலக்காடு சந்திப்பு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், செங்கனூர், கொல்லம் சந்திப்பு, திருவனந்தபுரம் சென்ட்ரல், மற்றும் நாகர்கோவில் சந்திப்பு.

விவேக் எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் என்ன?

திப்ரூகரில் இருந்து தினமும் இரவு 7.40 மணிக்கு புறப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் 74 மணி நேரம் கழித்து இரவு 9.55 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது. இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து தினமும் மாலை 5.25 மணிக்கு புறப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் 75 மணி நேரம் கழித்து இரவு 9 மணிக்கு திப்ரூகர் சென்றடைகிறது.  

Read Entire Article