ARTICLE AD BOX
மதுரை ‘வைகை’ விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்
சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் ‘வைகை’ (12635) விரைவு ரயில் மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில் பகல் 1.45க்கு புறப்பட வேண்டியிருந்த நிலையில், சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ரயில் தாம்பரத்தில் இருந்து பகல் 2.15க்கு பயணத்தை தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேபோல், காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி இயக்கப்படும் ‘பல்லவன்’ (12606) விரைவு ரயில் மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். காலை 5.40க்கு காரைக்குடியில் இருந்து புறப்படும் இந்த ரயில், தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்வே பயணிகள் இவ்வாறான மாற்றங்களை கருத்தில் கொண்டு தங்களது பயண திட்டங்களை முன்னரே மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.