தூத்துக்குடியை பதறவைத்த தாய்-மகள் கொலை விவகாரம்.. குற்றவாளி சுட்டுப்பிடிப்பு.!

3 hours ago
ARTICLE AD BOX

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம், மேலநம்பிபுரம், கீழத்தெருவில் வசித்து வருபவர் பூவன். இவரின் மனைவி சீதாலட்சுமி (வயது 75). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பூவன் இயற்கை எய்தினார். தம்பதிகளிமகள் ராமஜெயந்தி (வயது 47). இவர் தனது கணவரை பிரிந்து தாயுடன் வசித்து வைக்கிறார். நேற்று முன்தினம் (மார்ச் 4) மாலை நேரத்தில் தாய்-மகள் வீட்டில் இருந்தனர். நீண்ட நேரம் இவர்கள் வீட்டில் நடமாட்டம் இல்லை.

நகை-பணத்துக்காக கொலை

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, இருவரும் சடலமாக இருந்தனர். பின் இதுகுறித்து எட்டயபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். சடலமாக மீட்கப்பட்ட இருவரும் தலையணை அழுத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அணிந்திருந்த 10 சவரன் நகைக்கும் மாயமானது தெரியவந்தது. 

இதையும் படிங்க: சமூக ஆர்வலருக்கு இப்படியா விதி முடியனும்? விபத்தில் நேர்ந்த சோகம்.!

சுட்டுப்பிடிப்பு

இதனையடுத்து, குற்றவாளியை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்த நிலையில், முக்கிய குற்றவாளி முத்துலாபுரம், வைப்பாறு காட்டுப்பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள், குற்றவாளி முனீஸ்வரனை கைது செய்தனர். அதிகாரிகள் கைது ஆண்டவடிக்கையின்போது, அவர்களை தாக்கி தப்பிச் செல்ல முற்பட்ட நபர், காவல்துறையினரால் சுட்டு பிடிக்கப்பட்டார். மேலும், காயமடைந்த காவலர் எஸ்.ஐ முத்துராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: தாய் - மகள் கொலை., நகைகள் மாயம்.. தூத்துக்குடியில் கொடூரம்.!

Read Entire Article