ARTICLE AD BOX
வார ராசி பலன்: கடகம், சிம்மம், கன்னி அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசி இதுதான்?.. முழு விவரம் இதோ
வார ராசி பலன்: மார்ச் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை பங்குனி மாதம் நடைபெறவுள்ளது. அந்த வகையில், பங்குனி மாதத்தில் மார்ச் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
மார்ச் மாதத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். இந்த கிரகங்களில் பெயர்ச்சி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஒவ்வொரு ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், மார்ச் மாதத்தில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனி பகவான் சில ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தரப்போகிறார். மாதத்தில் சிறந்த மாதமான பங்குனி மாதம் தற்போது தொடங்கியுள்ளது. பங்குனி மாதத்தில் மார்ச் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு மேலதிகாரிகள் சொல்வதை கேட்டுச் செல்வது நல்லது. தர்க்கத்தை தவிர்ப்பது நல்லது. பயணங்களில் புதிய அறிமுகங்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகள் விஷயம், அண்டை அயலாரிடம், பெற்றோரின் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. சிவன் வழிபாடு நல்ல பலன்களைத் தரும்.
பிள்ளைகளின் படிப்பு, வியாபாரம், தொழிலில் அனுகூலம் ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். தைரியம் ஏற்படும். பிள்ளைகளுககும் உங்களுக்கும் இருந்து வந்த மனத் தாங்கல்கள் தீரும். கடகம் இருக்கக்கூடிய பிள்ளைகளுக்கு நல்லது நடக்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் சேருவதற்கான வாய்ப்பு உண்டாகும்.
கணவன், மனைவி கருத்து வேறுபாடு நீங்கும். பயணம் மேற்கொள்வார்கள். அந்நியோன்யம் அதிகரிக்கும். இரு குடும்பத்தினருக்கும் இருந்து வந்த மனத் தாங்கல்கள் தீரும். திருமணத்தில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு மறுமணம் ஏற்படும். மூட்டு வலி, முதுகு வலி ஏற்படும். அஷ்டமசனி விலகினாலும் சிறிது நாட்களுக்குப் பிரச்சனை ஏற்படும். வாகனத்தில் வித்தை காட்டுவதை தவிர்ப்பது நல்லது. பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதி அற்புதம் ஏற்படும். ஆக்கப்பூர்வ முன்னேற்றத்துக்கு அனுகூலமான காலகட்டமாக இருக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆஞ்சநேயர் வழிபாடு அனுகூலத்தை தரும். திங்கள்கிழமை மதியம் 1 மணி முதல் 2 மணி வரை எலுமிச்சை சாதம் தானமாக அளிப்பது நல்ல பலன்களைத் தரும். தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். துணை சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. பழைய கடன்களை அடைப்பீர்கள், தேக ஆரோக்கியத்தில் கண், நரம்பு பிரச்சனை ஏற்படக்கூடும்
உங்களுக்கு துரோகம் செய்தவர்களை தியாகியாக நினைப்பீர்கள். மாற்றிக் கொள்வது நல்லது. உதவி செய்பவர்கள் கிடைப்பது கஷ்டம். அவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்வது நல்லது. அஷ்டமத்தில் சூரியன் இருக்கக்கூடிய மாதம் பங்குனி. தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தூக்கத்தை கெடுத்துக் கொள்ளக் கூடாது. வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் இருப்பது நல்லது.
தைரியம், நம்பிக்கை ஏற்படும். பயணங்கள் இனிமையானதாக இருக்கும். அசையும், அசையா சொத்துகள் சேர்க்கை ஏற்படும். நம் மீது அக்கறை கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்ற நம்பிக்கை உண்டாகும்.
கன்னி: குடும்பத்தில் அந்நியோன்ய குறையில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பெருமாள் வழிபாடு நல்ல பலன்களைத் தரும். வெள்ளிக்கிழமை பசு மாடுகளுக்கு உணவு கொடுப்பது தடை எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கும். கேது ஜென்மத்திலும், ராகு 7 இல் இருப்பதாலும் கோளார் பதிகம் கேட்பது நல்லது. தொழில் ரீதியாக மேலதிகாரிகளுக்கும், உங்களுக்கும் தேவையில்லாத மனக்கசப்பு ஏற்படும். தொழிலில் மாற்றம் வந்தால் மாற்றிக் கொள்வது நல்லது.
பிள்ளைகள் விஷயத்தில் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் நம்பிக்கை ஏற்படும். அதீத தைரியம் ஏற்படும். உலகமே ஒதுக்கினாலும் நீங்கள் மற்றவர்களை ஒதுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். உங்களுடைய நம்பிக்கை உங்களை காப்பாற்றும். கணவன், மனைவி உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது. பெருமாள், தாயார், மகாலட்சுமி கோயிலில் வழபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். காது மூக்கு தொண்டை வலி, தோல் அலர்ஜி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
- இன்சல்ட் செய்தாரா நயன்தாரா? கடுப்பான மீனா போட்ட பதிவு! தொடங்கியது அடுத்த பிரச்சனை
- 1000 சவரன் தங்கம், உயில் சொத்துகள்.. அன்னை இல்லம் வீட்டு சாப்பாடு.. சிவாஜி அப்பாவுக்கு உதவபோவது யார்
- கதறும் வால் ஸ்ட்ரீட்! அமெரிக்காவே நடுங்குது! அடுத்து இந்தியா, இங்கிலாந்துதான்! டிரம்ப்பால் வந்த வினை
- மும்மொழி சர்ச்சை: ஓபன் சவால் விடுகிறேன்.. பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு பிடிஆர் சேலன்ஞ்!
- 100 வருடங்களில் இல்லாத மிக மோசமான சம்பவம் நடக்க போகுது.. உஷார்.. Rich Dad Poor Dad ஆசிரியர் வார்னிங்
- பிறந்தமேனியாக ஜோதிடரை நிற்க வைத்து, பக்கத்தில் நின்ற பெண்.. தங்க நகைகள் வேற.. நம்பவே முடியாத ட்விஸ்ட்
- பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால்.. பதிவு கட்டணம் குறைக்கப்படும்! தமிழக அரசு அறிவிப்பு
- அமெரிக்காவின் ஹெல்த்கேர் சிஸ்டமே அழிய போகுது.. இந்தியாவை சீண்டி சூடு போட்டுக்கொண்ட டிரம்ப்.. தேவையா?
- நேரடியாக வங்கி கணக்கிற்கே வரும் ரூ.50000 + ரூ.7000.. பட்ஜெட்டில் தங்கம் அறிவிப்பு.. யாருக்கு பலன்?
- பயணிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய ரயில்வே.. வைகை, பல்லவன் எக்ஸ்பிரசில் வந்த மாற்றம்
- பழைய ஓய்வூதிய திட்டம் எங்கே? பட்ஜெட்டால் கடுகடுப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அடுத்து என்ன?
- ஆதார் அட்டை வைத்துள்ளோருக்கு அறிவிப்பு.. ஆதார் புதிய பதிவிற்கு விலக்கு! வேலூரில் 7 மையங்களில் அதிரடி