வார ராசி பலன்: மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு பாதகமா, சாதகமா?.. முழு விவரம் இதோ

23 hours ago
ARTICLE AD BOX

வார ராசி பலன்: மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு பாதகமா, சாதகமா?.. முழு விவரம் இதோ

Astrology
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: மார்ச் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை பங்குனி மாதம் நடைபெறவுள்ளது. அந்த வகையில், பங்குனி மாதத்தில் மார்ச் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் மாதத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். இந்த கிரகங்களில் பெயர்ச்சி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஒவ்வொரு ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Weekly rasi palan Astrology lucky zodiac signs

அந்த வகையில், மார்ச் மாதத்தில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனி பகவான் சில ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தரப்போகிறார். மாதத்தில் சிறந்த மாதமான பங்குனி மாதம் தற்போது தொடங்கியுள்ளது. பங்குனி மாதத்தில் மார்ச் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மகரம்: மகரத்துக்கு அருமையான காலகட்டம். அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் உண்டாகும். பைரவர் வழிபாடு நல்ல நன்மைகளைத் தரும். மன அழுத்தம் போகும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பதற்றம் குறையும். கடன் தீரும். புதிய பொறுப்புகளுக்கு வருவீர்கள். உத்தியோகத்தில் ஏற்றம் பெறுவீர்கள். அடிமைத் தொழிலில் இருந்து தனிப்பட்ட தொழில் தொடங்குவீர்கள்.

வண்டி வாகனத்தில் மாற்றம் ஏற்படும். சுப காரியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இருந்த மனத் தாங்கல்கள் தீரும். பிள்ளைகளுடைய படிப்பு, தொழில், வியாபார தடை நீங்கும். நீங்கள் இருக்கும் வீடுகளில் சுப காரியத் தடைகள் நிவர்த்தி ஏற்படும். சுப விரைய பிராப்தம் உண்டாகும்.

குடும்பத்தில் புதிய வரவு உண்டாகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு குட் நியூஸ் சொல்வார்கள். ஏற்றம், சுபிக்ஷத்தை பெறுவீர்கள். யோகமும், அனுகூலமும் ஒன்று சேரக்கூடிய அனுகூலமான காலகட்டம். செல்வாக்கு கூடும். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் அனுகூலம் உண்டாகும். தாய் வழி, தந்தை வழி உறவில் மேன்மை அடையும். அரசு துறை, அரசியல்வாதிகள் பெரிய நிலைக்கு வருவார்கள். வாகனத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் இனிமையை கடைப்பிடிப்பது நல்லது. கஷ்டங்கள் எல்லாம் தீரும் காலகட்டம்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு நரசிம்மர் வழிபாடு அருமையான அனுகூலத்தை தரும். நரசிம்மர் காயத்ரி சொல்வது நல்லது. பல், தலைவலி, அலர்ஜி, சுவாசக் கோளாறு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது நல்லது. யாருடனாவது பிரச்சனை இருந்தால் செல்போனில் பேசி சுபிக்ஷமாக முடியும். ஆச்சரியத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.

தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த கஷ்டம் தீரும். குடும்பம், வெளிவட்டாரத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. துணை தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எல்லா விதத்திலும் ஏற்றம், அனுகூலம் உண்டாகும். தேன் தடவிய வார்த்தைகளைப் பயன்படுத்துவது நல்லது.

மீனம்: மீனம் ராசிக்காரர்களுக்கு பங்குனி மாதம் முழுவதும் உங்கள் ராசியில் தான் இருப்பார். சட்டத்திற்குப் புறம்பானவர்களின் நிழல் கூட அண்டாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சக ஊழியர்களுடன் கோபதாபம் கூடாது. விநாயகர், அனுமன் வழிபாடு நல்ல நன்மைகளைத் தரும். சனிக்கிழமை மதியம் தயிர் சாதம் எலுமிச்சை ஊறுகாய் தானமாக கொடுக்கலாம்.

வயிறு, முதுகு, கால், பாதம், மலக்குடல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது அனுகூலமான பலன்களைத் தரும். உடற்பயிற்சிதான் உங்களுக்கு பரிகாரமே. மேலதிகாரிகளிடத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியங்களில் ஜெயம், அனுகூலம் உண்டாகும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏற்றம் உண்டாகும்.

பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அசையும், அசையா பொருள் சேர்க்கை, லாபம் உண்டாகும். தொடர்ச்சியாக இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் தீரும். யோகமும், அனுகூலமும் ஒன்று சேரக்கூடிய அற்புதமான காலகட்டம். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.

More From
Prev
Next
English summary
In this astrological article, you can learn about the benefits that Magaram, kumbam, meenam zodiac signs will get from March 17 th to 23th in the month of Panguni, and which deities they should worship.
Read Entire Article