நில அளவை செய்ய ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட்

3 hours ago
ARTICLE AD BOX

Tamil Nadu government land survey : தமிழ்நாடு அரசு மக்களுக்கான சேவைகளை எளிமையாக கொடுக்கும் வகையில் எல்லா துறைகளிலும் டிஜிட்டல்மயத்தை புகுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக நில அளவை செய்யவும் ஆன்லைனில் இனி விண்ணப்பிக்கலாம். அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்திவிட முடியும். இதனால் மக்கள் நில அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க தேவையில்லை. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அம்மாவட்ட மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி பயன்பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார். 

அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு அரசின் அறிவித்துள்ள நில அளவீட்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி, ஆன்லைனில் கட்டணம் செலுத்துவது எப்படி என்பது உள்ளிட்ட முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தூத்துக்குடி மாவட்ட
பொதுமக்கள் நிலஅளவை செய்ய எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்' நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியிலேயே செறுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். 

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்பித்து வந்த நிலையில்,
வட்டஅலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், httstamilnilam.tn.gw.incitizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 20.11.2023 அன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய எற்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்' நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல். Citizen Portal மூலமாக இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது இச்சேவையினை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொதுசேவை மையங்கள் (இசேவை) மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில் இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய பொதுசேவை மையங்களை அணுகி, நிலஅளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க இயலும். நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி காமிலாக தெரிவிக்கப்படும். மேலும் நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கை வரைபடம் நிலஅளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரர் hts eservicestngwin - என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும் படிக்க | அரசு வழங்கிய வீடுகளுக்கான பட்டா பெற சிறப்பு முகாம் - 2 நாள் மட்டுமே உள்ளது

மேலும் படிக்க | ஏழை குடும்பங்களுக்கு தமிழக அரசு வழங்கும் சொந்த வீடு! யார் யாருக்கு கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article