ARTICLE AD BOX
ஐபிஎல் தொடரில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஹாரி ப்ரூக் விளையாட பிசிசிஐ தடை விதித்தது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி பேசியுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.
அனைத்து அணிகளின் வீரர்களும் அவர்களது அணியின் பயிற்சி முகாமில் இணைந்து ஐபிஎல் தொடருக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய உம்ரான் மாலிக்; கேகேஆர் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு!
பிசிசிஐ-ன் முடிவு கடுமையானதா?
ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் விளையாட பிசிசிஐ தடை விதித்தது கடுமையான முடிவு கிடையாது என அந்த அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஹாரி ப்ரூக் விவகாரத்தில் பிசிசிஐ-ன் முடிவு கடுமையானது கிடையாது. பிசிசிஐ-ன் முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஐபிஎல் தொடரிலிருந்து நிறைய பேர் விலகியுள்ளனர். கடந்த காலங்களிலும் இதுபோன்று நடந்துள்ளது. அதன் பின், அவர்கள் மீண்டும் அணியில் நல்ல தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு விளையாடியுள்ளனர்.
இதையும் படிக்க: பஞ்சாப் கிங்ஸில் ஆப்கன் ஆல்ரவுண்டர் இணைவதில் தாமதம்; காரணம் என்ன?
ஐபிஎல் தொடரிலிருந்து ஹாரி ப்ரூக் விலகியுள்ளது தில்லி கேபிடல்ஸ் அணிக்கு சற்று பின்னடைவைக் கொடுத்துள்ளது. ஹாரி ப்ரூக் போன்ற வீரர் ஒருவர் அணியிலிருந்து விலகினால், எந்த அணிக்கும் அது பின்னடைவாகவே இருக்கும். ஹாரி ப்ரூக்கை மறந்துவிட்டு ஒரு நொடி யோசித்துப் பாருங்கள். காயம் அல்லது தனிப்பட்ட குடும்ப காரணங்களின்றி ஐபிஎல் தொடரிலிருந்து விலகினால் தடை விதிக்கப்படும் என்ற விதி இருக்கிறது.
காயம் ஏற்பட்டு விலகியிருந்தால் அது வேறு. ஆனால், சாதாரணமான சூழலில் திடீரென அணியிலிருந்து வெளியேறினால், சம்பந்தப்பட்ட வீரர் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால், ஹாரி ப்ரூக் விவகாரத்தில் பிசிசிஐ-ன் முடிவு கடுமையானதாக தெரியவில்லை என்றார்.
இதையும் படிக்க: கடந்த சீசனில் கேப்டன், இந்த முறை துணைக் கேப்டன்; தில்லி கேபிடல்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதில் கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறி ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென விலகிய ஹாரி ப்ரூக், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதும் குறிப்பிடத்தக்கது.