வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

4 days ago
ARTICLE AD BOX

சென்னை,

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை மற்றும் பல்வேறு இடங்களுக்கு கூடுதலான பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செல்ல நாளை (வெள்ளிக்கிழமை) 245 சிறப்பு பஸ்களும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) 240 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு செல்ல நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தலா 51 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

மேலும் மாதாவரத்திலிருந்து 21/02/2025 அன்று 20 பஸ்களும், 22/02/2025 அன்று 20 பஸ்களும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,708 பேர், சனிக்கிழமை 3,132 பேர், ஞாயிறு 7,612 பேரும் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள உள்ள பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் www.tnstc.inஎன்ற இணையதளத்திலும், செல்போன் செயலி மூலமும் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Read Entire Article