ARTICLE AD BOX
தாம்பூலத்தில் வைக்கப்படும் வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன..??
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து பயன்படுத்தி வரும் ஒன்றுதான் இந்த வெற்றிலை. வெற்றிலை என்பது தாம்பூலத்திற்கு மட்டும் வைப்பதற்கு உதவும் என்று கிடையாது. வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். அதைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வெற்றிலையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து இருப்பதால் இது உடலுக்கு பலவகையான நன்மைகளை தருகிறது. மூச்சுக்குழல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலை எண்ணெய் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. சாப்பிட்ட பிறகு ஜீரணத்திற்கு வெற்றிலை போடுவதால் நல்ல பலன் கிடைக்கும். வெற்றிலையில் வேர் பெண்களின் மலட்டு தன்மை பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. தாம்பூலத்தில் வைக்கப்படும் இந்த வெற்றிலைக்கும் பாக்குக்கும் சுண்ணாம்புக்கும் நோய் தடுப்பு ஆற்றல் என்பது அதிகம் உள்ளன.