ARTICLE AD BOX
த.வெ.க.வின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் நடந்துள்ளது. விஜய் பேசும் போது, மத்திய அரசு மற்றும் மாநில அரசு என்று இரண்டையும் குற்றம் சாட்டியுள்ளார். உங்கள் குழந்தைக்கு மூன்று மொழி.. நீங்கள் நடத்தும் விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் மூன்று மொழி. ஆனால் த.வெ.க. தொண்டர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் இரு மொழியா..விஜய் சொல்வதை தன் வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும். கெட் அவுட் என்று கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறார். கெட் அவுட் கையெழுத்து இயக்கம் தொடங்கிய சில நொடிகளில் பிரசாந்த் கிஷோர் விலகி சென்றுவிட்டார். அதற்கான மரியாதை அங்கேயே தெரிந்துவிட்டது. விஜய்-க்கு ஆலோசனை சொல்லும் பிரசாந்த் கிஷோரின் நடவடிக்கையும் அனைவருக்கும் காட்டி கொடுத்துவிட்டது. அதனால் எங்கேயும், யாரும் மொழியை திணிக்கவில்லை. நீங்களே ப்ரோ என்று சொல்லி பொய் சொல்லலாமா ப்ரோ..? பிரசாந்த் கிஷோருக்கு ஒரு கேள்வி.பிரசாந்த் கிஷோருக்கு ஒரு கேள்வி. அவர் ஏன் தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தினார்? அதற்காக மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள். தனிப்பட்ட முறையில் உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்சனை" என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.