வாடிவாசல் அப்டேட் வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ்!

1 day ago
ARTICLE AD BOX

வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படம் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

'கங்குவா' படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெற்றி மாறன் 'விடுதலை - 2' படப்பிடிப்பில் தீவிரமாக இருந்தார்.

இதனால், 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்த சூர்யா, அடுத்தாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

தற்போது, இயக்குநர் வெற்றிமாறனும் 'விடுதலை - 2' வெளியானதைத் தொடர்ந்து, 'வாடிவாசல்' திரைப்படத்தின் பணிகளைத் தொடங்கியுள்ளார்.

இதையும் படிக்க : கண்கண்ட தெய்வமா, கணவன்?ஜென்டில்வுமன் - திரை விமர்சனம்!

படத்துக்கான இசையமைக்கும் பணிகளைத் தொடங்கியதாக வெற்றிமாறனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் வெள்ளிக்கிழமை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வாடிவாசல் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டுக்காக காத்திருந்த சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக, வாடிவாசல் திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும், ஒரே கட்டத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், வருகின்ற மே அல்லது ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.

Read Entire Article