ARTICLE AD BOX

மும்பை ஆண்டேரி (ஈஸ்ட்) பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் எரிவாயு குழாய் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அதாவது Sher-E-Punjab Society அருகிலுள்ள Takshila பகுதியில், ஒரு குருத்வாரா அருகே மஹாநகர் கேஸ் லிமிடெட் (MGL) நிறுவனத்தின் வாயு வழங்கும் குழாய் திடீரென கசிந்ததால், இரவு 12.35 மணிக்கு தீப்பற்றியது. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர் மற்றும் இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன. இது Level-One தீவிபத்தாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விபத்து காரணம் அறிவிக்கப்படவில்லை
விபத்து நடந்த உடனே தண்ணீர் டேங்கர், தீயணைப்புப் பிரிவு வாகனம் மற்றும் மற்ற உதவிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. தீயணைப்புத் துறையினர் 1.34 மணி அளவில் தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர். மேலும் இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.