ARTICLE AD BOX
புதுக்கோட்டை: புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி நாளை (மார்ச்.10) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் மிகவும் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து அம்மனை பய பக்தியுடன் வழிபட்டு செல்கின்றனர். மேலும், பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை(மார்ச்.10) நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்ய வரும் 15ம் தேதி பணிநாளாக கடைபிடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.