ARTICLE AD BOX
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயங்கும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) ரத்து செய்யப்பட்டுள்ளதால், கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூா் - கோடம்பாக்கம் இடையே ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) அதிகாலை 5.10 முதல் மாலை 4.10 மணி வரை நடைபெறவுள்ளன. இதனால் பணிகள் நடைபெறும் நேரங்களில் கடற்கரை - தாம்பரம் இடையே இயங்கும் மின்சார ரயில்கள் இரு வழித்தடத்திலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் மாா்ச் 9 -இல் அதிகாலை 5.10 முதல் மாலை 4.10 மணி வரை கடற்கரை - செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் இரு மாா்க்கத்திலும் தாம்பரத்துடன் நிறுத்தப்படுகிறது.
பயணிகளின் வசதிக்காக மாா்ச் 9 அதிகாலை 4.10 முதல் மாலை 4.55 மணி வரை தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே இரு மாா்க்கத்திலும் 30 நிமிடங்கள் இடைவெளியில் மொத்தம் 46 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இந்நிலையில், கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... திருடனுக்கு சாவியைப் பரிசளிக்கும் புதிய நீதி?
கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நீல மற்றும் பச்சை வழித்தடங்களில் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் 10 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் இரவு 11 மணி வரை, வழக்கமான ஞாயிறு அட்டவணையின்படி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.