ராகுலின் உதவியால் தொழிலதிபராகும் செருப்புத் தைக்கும் தொழிலாளி!

7 hours ago
ARTICLE AD BOX

ராகுல் காந்தியின் உதவியால் புதிய காலணி பிராண்டைத் தொடங்கவுள்ள செருப்புத் தைக்கும் தொழிலாளியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அவதூறு வழக்கு தொடர்பாக, உத்தரப் பிரதேசம் சென்ற ராகுல் காந்தி, தனது ஷூவைத் தைப்பதற்காக சுல்தான்பூரில் ராம்சைத் என்ற தெருவோர செருப்புத் தைக்கும் கடைக்கும் சென்றார். மேலும், கடையில் ஷூவைத் தைத்ததுடன், தானும் தைக்கக் கற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, ராகுலின் அழைப்பை ஏற்று, அவரது வீட்டுக்கு சென்ற ராம்சைத், தான் தைத்த செருப்பையும் ராகுலுக்கு பரிசாக வழங்கினார். இதனிடையே, ராம்சைத்துக்கு புதிய தையல் இயந்திரம் பரிசாக அனுப்பி வைத்தார். அதுமட்டுமின்றி, மும்பையில் தோல் தொழிலதிபரான சுதீர் ராஜ்பரையும் ராம்சைத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி மற்றும் சுதீர் ராஜ்பர் இருவரின் உதவியாலும், உத்வேகத்தினாலும் ராம்சைத் மோச்சி என்ற பெயரில் புதிய காலணி பிராண்டை ராம்சைத் தொடங்கவுள்ளார்.

Read Entire Article