ARTICLE AD BOX
எடையை குறைக்க நடைபயிற்சி செய்யும்போது எதை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை இங்கே காணலாம்.

Benefits Of Walking On An Incline For Weight Loss : நடைபயிற்சி செய்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தினாலும், எடையை குறைப்பதற்கு இதுவே சிறந்த பயிற்சியாக சொல்லப்படுகிறது. நீங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு நடைபயிற்சி செய்பவராக இருந்தால் எதை கருத்தில் கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

வழக்கமான நடைபயிற்சியை காட்டிலும் அதிக கலோரிகளை எரிக்க சாய்வான நடைபயிற்சி உதவுகிறது. அதாவது மேல்நோக்கி நடப்பது, சாய்வான டிரெட்மில்லில் நடப்பது அல்லது மலைகள் அல்லது சரிவுப் பாதைகள் என சாய்வான பரப்புகளில் நடைபயிற்சி செய்வதே சாய்வான நடைபயிற்சியாகும்.
இதையும் படிங்க: வாக்கிங் போறப்ப இந்த '1' விஷயம் மட்டும் சரியா பண்ணா போதும்!! ஆய்வில் தகவல்

சமதளமான பரப்பின் நடப்பதை விட சாய்வான பரப்பில் நடப்பது 50% அல்லது அதற்கு மேலான கலோரி எரிப்பினை ஊக்குவிக்கிறது. நமது உடல் ஈர்ப்பு விசைக்கு எதிராக முன்னோக்கி தள்ளப்பட அதிகமான ஆற்றலை செலவழித்து கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதனால் உடலில் உள்ள கொழுப்பு ஆற்றலாக பயன்படுத்தப்பட்டு எடை குறைய உதவுகிறது. எடையை குறைக்க நினைப்போர் அவ்வப்போது கட்டாயம் சாய்வான நடைபயிற்சி செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி மிதமான தாக்கத்தை கொடுத்தாலும் மூட்டுகளை வலுப்படுத்தக் கூடியது. மூட்டுகளின் மீது அழுத்தத்தை அதிகரிக்காமல் மிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: மூட்டுகளை வலுவாக்க சூப்பர் வாக்கிங் 'ட்ரிக்' வெறும் 100 காலடிகளில் 1000 காலடிகளின் பலன்!!

- சாய்வான நடைபயிற்சி செய்வதால் உங்களுடைய சகிப்புத்தன்மை அதிகமாகிறது. அதிகமான கலோரிகள் எரிக்கப்படுவதால் உடல் எடையை குறைக்க மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. உங்களுடைய வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, அதிக ஆற்றலை பயன்படுத்துவதால் எடை விரைவில் குறைகிறது.
- சாய்வான நடைபயிற்சி செய்வதால் கால் தசைகள், பிட்டம், தொடை எலும்புகளை வலுப்படுத்துகின்றது. தொடர்ந்து சாய்வான பயிற்சிகளில் ஈடுபட்டால் உடலுடைய வலிமை படிப்படியாக அதிகரிக்கிறது.
- ஓடுதல் மூலம் எப்படி கீழ் உடலின் தசைகள் வலுப்படுகின்றனவோ அவ்வாறே சாய்வான நடைபயிற்சியிலும் வலுப்படும்.
- இதய ஆரோக்கியம், நுரையீரல் செயல்திறன் மேம்பாடு, மனநிலை மேம்பாடு என உடலின் ஒட்டுமொத்த நன்மைகளுக்கும் சாய்வான நடைபயிற்சி உதவுகிறது.
- நீரிழிவு நோயாளிகள் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யலாம். வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் சாய்வான நடைபயிற்சியினை செய்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.