ARTICLE AD BOX
தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து இன்று வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது விவசாயிகளை ஊக்கும் விக்கும் வகையில் பல்வேறு சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
எண்ணெய்வித்துகள் இயக்கம
தமிழ்நாட்டில் நிலக்கடலை, எள், சூரியகாாந்தி, ஆமணக்கு போன்ற பிரதான எண்ணெய் வித்துப் பயிர்கள் சராசரியாக 10 இலட்சத்து நான்காயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. உணவு எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடையும் வகையில், நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய பயிர்களின் பரப்பினை அதிகரிக்கும் பொருட்டு, எண்ணெய்வித்துகள் இயக்கம், 2025-26 ஆம் ஆண்டில் இரண்டு இலட்சத்து 16 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சுமார் 90 ஆயிரம் உழவர்கள் பயன்பெறும் வகையில் 108 கோடியே 6 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
இதையும் படிங்க: வேளாண் தொழிலாளர்கள் விபத்து மரணம்! இழப்பீடு ரூ.2,00,000 உயர்வு!
வேளாண்மையில் அதிக உற்பத்திக்கும், தொழில்நுட்ப பயன்பாட்டிற்கும் ரொக்கப்பரிசுகள்
* சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துகள், கரும்பு உள்ளிட்ட 11 பயிர்களில் நவீன வேளாண் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து, உயர் விளைச்சல் பெறும் உழவர்களை ஊக்குவிக்க மாநில அளவில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று உழவர்களுக்கு முதல் பரிசாக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஒரு இலட்சம் ரூபாய் என 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம், 2025-26 ஆம் ஆண்டிலும் 55 இலட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* மேலும், நவீன வேளாண் கருவிகள், நவீன சாகுபடித் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து கடைப்பிடிப்பதில் சிறந்து விளங்கும் மூன்று நபர்களுக்கு முதல் பரிசாக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.