வரலாற்றுப் படம் ‘சாவா’ கலெக்‌ஷன் மாஸ்: படக்குழுவினர் உற்சாகம்..

4 days ago
ARTICLE AD BOX
actress rashmika mandanna in chhaava movie box office collection

ராஷ்மிகா நடித்துள்ள ‘சாவா’ திரைப்பட கலெக்‌ஷன் பற்றிப் பார்ப்போம்..

பாலிவுட் சினிமாவில் லட்சுமண் உட்டேகர் இயக்கத்தில் விக்கி கெளஷல்-ராஷ்மிகா மந்தனா நடித்த வரலாற்றுப் படம் ‘சாவா’ பாக்ஸ் ஆபிஸில் மாஸ் வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் படத்தின் 6-வது நாள் வசூல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் விக்கி கவுசல், சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். ராஷ்மிகா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். படத்தை, 130 கோடி பட்ஜெட்டில் தினேஷ் விஜன் தயாரித்துள்ளார்.

தற்போது இப்படம் 6-வது நாளில் 32 கோடி வசூல் செய்துள்ளது. அவ்வகையில் ‘சாவா’ இந்திய பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதாவது, படத்தயாரிப்பு செலவை விட அதிகமாக சம்பாதித்துள்ளது. படத்தின் உலகளாவிய வசூல் 250 கோடியைத் தாண்டியுள்ளது.

வேலை நாட்களில் சாவா படத்தின் வசூல் சற்று குறைந்தது. படம் முதல் திங்கட்கிழமை 24 கோடியும், செவ்வாய்க்கிழமை அதாவது ஐந்தாவது நாளில் 25.25 கோடியும் வசூல் செய்தது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 203.68 கோடி வசூல் செய்துள்ளது. இதனால், படக்குழுவினர் வெற்றி விழாவுக்கு தயாராகி வருகின்றனர்.

இதில் அக்சய் கண்ணா, வினீத் குமார், ராணா, திவ்யா தத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

actress rashmika mandanna in chhaava movie box office collectionactress rashmika mandanna in chhaava movie box office collection

The post வரலாற்றுப் படம் ‘சாவா’ கலெக்‌ஷன் மாஸ்: படக்குழுவினர் உற்சாகம்.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article