வன்முறையை தூண்டுவதே ஆளுநரின் வேலையாக உள்ளது! சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு!!

4 hours ago
ARTICLE AD BOX

தமிழ்நாட்டில் வன்முறையைத் தூண்டுவதே ஆளுநர் ஆர்.என்.ரவியின் வேலையாக உள்ளது. பதவிக்காலம் முடிவடைந்து பதவி நீட்டிப்பு காலத்தில் இருந்து வரும் ஆளுநர், தனது பதவியை  தக்கவைத்துக்கொள்ள இது போல் செயல்படுகிறார் என்று தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளார்களிடம் பேசிய அப்பாவு,

”ஒரு பிரச்சனை குறித்து முதலமைச்சரிடமோ அல்லது தலைமைச் செயலாளரிடமோ ஆலோசனை நடத்தாமல் அடிக்கடி டெல்லி சென்று வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

அவருக்கு ஆளுநர் பணி முடிவடைந்து, பணி நீட்டிப்பான லீவ் ப்ளேஸில் இருந்து வருகிறார். இதனால் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்து தமிழ்நாட்டில் பிரச்சனை இருப்பதுபோன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். அப்படி பிரச்சனைகள் இருந்தால் அதை ஆளுநர் கூறினால் தமிழ்நாட்டு மக்களும் தெரிந்து கொள்வார்கள்தானே.

இந்திரா காந்தி பிரதமராக இருக்கும்போது இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் இந்தியாவை பெருமையாக நினைத்தது. ஆனால் தற்போது வெளியுறவு கொள்கையில் இந்திய அரசு வெற்றி அடையவில்லை என்றாலும் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதனால்தான் இந்திய அரசு மீனவர்கள் கைது விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கப்பற்படையை அனுப்பாமலும் அண்டை நாடான இலங்கையை கட்டுப்படுத்த முடியாத சூழலில் உள்ளது.

மீனவர்களை சந்திப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிமை இல்லை என்றாலும் வழிப்போக்கர்கள் கூறுவது போன்று கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும்.மக்களுக்கு என்ன செய்யலாம் என ஆளுநர் சிந்திக்க வேண்டும். தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டுவதே ஆளுநருக்கு வேலையாக உள்ளது. தனது பதவியை நிலை நாட்டுவதற்காகவே இதுபோன்று செயல்படுகிறார் ஆளுநர்” என்று கூறியுள்ளார்.

Read Entire Article