ரஷியா மீதான சைபா் தாக்குதல்: நிறுத்திவைத்தது அமெரிக்கா

3 hours ago
ARTICLE AD BOX

ரஷியாவுக்கு எதிரான இணையதள ஊடுருவல் தாக்குதலை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ரஷியாவுக்கு எதிரான இணையதள ஊடுருவல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்குமாறு யுஎஸ் சைபா்கமாண்டுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹேக்செத் உத்தரவிட்டுள்ளாா்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க-ரஷிய பேச்சுவாா்த்தையின்போது சுமூகமான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த முடிவால், உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதான ரஷியாவின் இணையதள ஊடுருவல் தாக்குதல்கள், தோ்தல் தலையீடுகள் போன்றவற்றை அமெரிக்காவால் இனி தடுத்துநிறுத்த முடியாது என்று கூறப்படுகிறது.

Read Entire Article