ARTICLE AD BOX

மத்திய அரசானது பெண்களுக்காக மகிளா சம்மன் யோஜனா என்ற சேமிப்பு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக அதிகமாக பெண்கள் சேமிக்க தொடங்குவார்கள் என்பதால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூபாய். 2 லட்சம் வரை பெண்கள் முதலீடு செய்துக்கொள்ளலாம். அதோடு மற்ற சேமிப்பு திட்டங்களை விட இந்த சிறுசேமிப்பு திட்டத்தில் வருடத்திற்கு 7.5 சதவீத வட்டி விகிதம் கிடைக்கிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு வரி விலக்கு பலனும் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கும் இந்த திட்டத்திற்கான பதிவு மார்ச் 8 ஆம் தேதி தொடங்குகிறது. சர்வதேச மகளிர் தினத்தன்று தொடங்கப்படும் இந்த பதிவை நாற்பத்தி ஐந்து நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.