தயாளு அம்மாளுக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் 1 மணிநேரம் காத்திருந்த ஸ்டாலின்!

4 hours ago
ARTICLE AD BOX

Dayalu Ammal Hospitalized: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றிரவு (மார்ச் 3) அனுமதிக்கப்பட்டார்.

Dayalu Ammal Hospitalized: திடீர் மூச்சுத் திணறல்

91 வயதான தயாளு அம்மாள் தற்போது கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார். வயது மூப்பு காரணமாக அவருக்கு நேற்றிரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை உடனடியாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கலைஞர் குடும்பத்தினர் பலரும் மருத்துவமனைக்கு நேற்றிரவு வருகை தந்தனர். தயாளு அம்மாளுக்கு மு.க அழகிரி, மு.க. ஸ்டாலின், மு.க. செல்வி, மு.க. தமிழரசு என நான்கு பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Dayalu Ammal Hospitalized: மருத்துவமனைக்கு வந்த ஸ்டாலின்

அவரை பார்ப்பதற்காக வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் நேற்றிரவு சுமார் 1 மணிநேரம் மருத்துவமனையிலேயே இருந்து, அதன்பின் வீட்டுக்கு புறப்பட்டனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வே. வேலு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சேகர் பாபு, மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், சன் குழும தலைவர் தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வந்தனர்.

தயாளு அம்மாளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க | நாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. 6 முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்

மேலும் படிக்க | விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம்; தமிழ்நாடு அரசின் தரமான திட்டம் - யாருக்கு கிடைக்கும்?

மேலும் படிக்க | தமிழக அரசு புதிய உத்தரவு.. இலவச வேட்டி-சேலை வாங்காதவர்கள் ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article