ARTICLE AD BOX
வன்முறை பாதித்த நாக்பூரியில் மூன்று நாள்களுக்குப் பிறகு சில பகுதிகளில் இன்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி வலதுசாரி அமைப்புகள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, கோட்வாலி, கணேஷ்பேத், லகட்கஞ்ச், பச்பாலி, சாந்தி நகர், சக்கர்தாரா, நந்தன்வான், இமாம்பாடா, யசோதரா நகர் மற்றும் கபில் நகர் காவல் நிலையப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து மூன்று நாள்களுக்குப் பிறகு, நந்தன்வான் மற்றும் கபிர் நகர் காவல் நிலையப் பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு முதல் ஊரடங்கு உத்தரவை நீக்கக் காவல் காவல் ஆணையர் ரவீந்தர் சிங்கால் உத்தரவிட்டார்.
மேலும், லகட்கஞ்ச், பச்பாலி, சாந்திநகர், சக்கர்தாரா, இமாம்பாடா பகுதிகளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவைத் தளர்த்தவும் சிங்கல் உத்தரவிட்டார். இதனால் மக்கள் அன்றாடத் தேவைக்கான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக்கொள்ள முடியும்.