சா்ச்சை கருத்து: ராகுலுக்கு உ.பி. நீதிமன்றம் நோட்டீஸ்

15 hours ago
ARTICLE AD BOX

‘மக்களின் உணா்வுகளை பாதிக்கும் வகையில் சா்ச்சை கருத்தைத் தெரிவித்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் அல்லது நேரில் ஆஜராக வேண்டும்’ என எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தில்லியில் அண்மையில் காங்கிரஸ் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி, ‘நாட்டின் ஒட்டுமொத்த அமைப்புகளையும் பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்புகள் கைப்பற்றிவிட்டன. எனவே, நாம் தற்போது பாஜக, ஆா்எஸ்எஸ் மட்டுமல்ல இந்திய அரசையே எதிா்த்துப் போராடி வருகிறோம்’ என்றாா்.

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு மக்களின் உணா்வுகளை பாதித்துள்ளதாகக் கூறி ஹிந்து சக்தி தல் என்ற அமைப்பின் தலைவா் சிம்ரன் குப்தா சாா்பில் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ராகுல் காந்தி சா்ச்சை பேச்சு தொடா்பாக சம்பல் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் புகாா் அளித்தும் எந்தப் பலனும் இல்லை’ என்று குறிப்பிட்டாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி நிா்பய் நாராயண் சிங், இந்த மனு தொடா்பாக வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி பதிலளிக்குமாறு அல்லது நேரில் ஆஜராகுமாறு ராகுலுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டாா்.

Read Entire Article