ARTICLE AD BOX
பந்தலூர் : நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நாடுகாணி பகுதியில் ஜீன்பூல் மரபியல் பூங்காவிற்கு ஏராளமான மாணவர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் மார்ச் 21 ம் தேதி உலக வன நாளை முன்னிட்டு சேரம்பாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட சேரங்கோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 45 பேரை பந்தலூர் அருகே உள்ள நாடுகாணி மரபியல் பூங்காவிற்கு அழைத்து சென்றனர்.
ரேஞ்சர்கள் வீரமணி மற்றும் அய்யனார் மற்றும் வனத்துறையினர் மாணவர்களுக்கு காடுகள், இயற்கை மற்றும் தாவரங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அருங்காட்சியகம், மீன் அருங்காட்சியகம் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த இடங்களை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
The post வனத்துறை சார்பில் சேரங்கோடு அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சூழல் சுற்றுலா appeared first on Dinakaran.