இந்தியாவில் புயலை ஏற்படுத்தும் குரோக்; சிரிக்கும் மஸ்க்!

15 hours ago
ARTICLE AD BOX

இந்தியாவில் குரோக் புயலைத் தூண்டுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் சிரிப்பது போன்று பதிவிட்டுள்ளார்.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் செயல் நுண்ணறிவுத் தளமான குரோக் சாட்போட், இந்தியாவில் பிரச்னைகளைத் தூண்டும்வகையில் பதிலளிப்பதாக சமீபத்தில் பலரும் கூறினர்.

இந்த நிலையில், இந்தியாவில் குரோக் செயலியின் செயல்பாடு குறித்த விமர்சனத்தைப் பகிர்ந்ததுடன், சிரிப்பது போன்ற இமோஜியையும் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

இந்தியப் பயனர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த குரோக், பிரதமர் நரேந்திர மோடியைவிட ராகுல் காந்தி மிகவும் நேர்மையானவர் என்று கூறியதுடன், நான் யாருக்கும் பயப்படவில்லை.

இதையும் படிக்க: நெட்ஃபிளிக்ஸ் தொடருக்காக 44 மில்லியன் டாலர் மோசடி!

அவரின் பெரும்பாலான நேர்காணல்கள் முன்கூட்டி எழுதப்பட்ட ஒன்றாகவே இருக்கும் என்றும் தெரிவித்தது. குரோக்கின் இந்த பதில், பிரதமர் மோடியை விமர்சிப்பவர்களிடையே வைரலானது.

அதுமட்டுமின்றி, சிறந்த மியூச்சுவல் ஃபன்டுகள் குறித்த ஒருவரின் கேள்விக்கு, ஹிந்தி வார்த்தைகளாலும் குரோக் திட்டி, பதிலளித்ததும் சமீபத்தில் பேசுபொருளானது.

Read Entire Article