தொகுதி மறுசீரமைப்பு பஞ்சாயத்து.. எல்லாம் ஓகேதான்! ஆனா.. காங்கிரஸுக்கு சிக்கல் இருக்கே!

15 hours ago
ARTICLE AD BOX

தொகுதி மறுசீரமைப்பு பஞ்சாயத்து.. எல்லாம் ஓகேதான்! ஆனா.. காங்கிரஸுக்கு சிக்கல் இருக்கே!

Chennai
oi-Halley Karthik
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தை மத்திய அரசு குறைக்க கூடாது என தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களிலின் முதல்வர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் இன்று சங்கமித்த இவர்கள் மத்திய அரசுக்கு ஒருமித்த குரலில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முதல்வரும், கர்நாடகாக மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்கள். ஆனால், காங்கிரஸ் இந்த விவகாரத்தில் வட மாநிலங்களில் நெருக்கடியை சந்திக்க நேரும் என்று சொல்லப்படுகிறது.

INC congress tamil nadu

இந்த விஷயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும் எனில் முதலில் தொகுதி மறு வரையறை என்றால் என்ன? என்பதை தெரிந்துக்கொள்வோம். இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற எண்ணிக்கைகளை மக்கள் தொகைக்கு ஏற்ப கூட்டவும், குறைக்கவும் வழிவகுப்பததான் 'தொகுதி வரையறை'. ஆனால் நாடு முழுவதும் எப்படி ஒரே மாதிரி மக்கள் தொகை இருக்கும்? மக்கள் தொகையை தென் மாநிலங்கள் சிறப்பாக கட்டுப்படுத்தின. வடமாநிலங்கள் இந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டன.

எனவே மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தென் மாநிலங்கள் அடிவாங்கும். இந்த பிரச்சனைக்கு கடந்த 1976ம் ஆண்டு எமெர்ஜென்சி காலத்தில் ஒரு தீர்வு கொண்டுவரப்பட்டது. அதாவது 42வது அரசமைப்பு திருத்தம் செய்யப்பட்டது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு (2001 வரை) மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரை செய்ய கூடாது என்று இந்த திருத்தம் சொன்னது. சரி 2001ல் என்ன ஆச்சு என்று கேட்கிறீர்களா? அப்போது வாஜ்பாய் தலைமையிலான அரசு தொகுதி மறுவரையை கையில் எடுக்க நினைத்து.

25 ஆண்டுகளுக்கு பிறகும் கூட மக்கள் தொகை கட்டுப்பாட்டில் தென் மாநிலங்கள் சிறப்பாக இருந்தன. ஆனால், வட மாநிலங்கள் தங்கள் கடமையை செய்ய தவறிவிட்டன. இதனால் நாடு முழுவதும் சரிசமமான மக்கள் தொகை இல்லை. ஆகவே, அடுத்த 25 ஆண்டுகளுக்கு (2026) வரை மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதை வாஜ்பாய் நிறுத்தி வைத்தார்.

1976 போய்.. 2001 கடந்து இதோ 2026 வந்துவிட்டது. சரி இப்போதாவது மக்கள் தொகை கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று பார்த்தால் இல்லை என்றுதான் பதில் வருகிறது. வட மாநிலங்கள் வழக்கம் போல மக்கள் தொகையை கட்டுப்படுத்த தவறிவிட்டது. ஆனால் மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு அதன் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் உருவாகியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால்.. தென் இந்தியாவின் இடங்கள் 30% என்பதலிருந்து 20% என குறையும் அபாயம் உள்ளது.

இந்த அச்சம் காரணமத்தான் தென் மாநிலத்தின் முதல்வர்கள், துணை முதல்வர் இதர முக்கிய அதிகாரிகள் இன்று ஒன்றாக கூடி, மத்திய அரசு இதை செய்யக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். இதில் காங்கிரஸ் சார்பில் கர்நாடக துணை முதல்வரும், தெலங்கானா முதல்வரும் பங்கேற்றிருந்தனர். இது அக்கட்சிக்கு கொஞ்சம் பாசிட்டிவாக தெரிந்தாலும், வட மாநிலங்களில் இது நெகட்டிவ்வாக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சர்கள் பாயிண்டை பிடித்து சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

அதாவது, வட மாநிலங்களுக்கு அதிக எம்பி சீட் கிடைக்க இருக்கிறது. இதனை தென் மாநிலங்கள் தடுக்கின்றன. அதற்கு காங்கிரஸ் துணை போகிறது என்று பாஜக குண்டை தூக்கி போடும். இதனால் காங்கிரஸ் கடுமையான சிக்கலுக்கு ஆளாக வாய்ப்பு இருக்கிறது. பார்ப்போம் காங்கிரஸ் இதனை எப்படி சூதானமாக கையாள்கிறது என்று. வழக்கமாக பிரிவினை அரசியல் உடனடியாக கை கொடுக்கும். ஆகவே காங்கிரஸ் சரியான நிலைப்பாட்டை எடுத்து, தொகுதி மறுவரையறைக்கு ஏன் எதிர்ப்பு எழுந்திருக்கிறது என்பதை விளக்கவில்லை எனில் வட மாநிலங்களில் அக்கட்சி இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொள்ளும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
English summary
The Chief Ministers of southern states, including Tamil Nadu, Kerala, Karnataka, and Telangana, have emphasized that the central government should not reduce the representation of southern states under the guise of constituency delimitation. Gathering in Tamil Nadu today, they collectively voiced their demand to the central government in a unified manner.
Read Entire Article