ARTICLE AD BOX
வடித்த சாதத்தின் கஞ்சியை குடித்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா..??
நம்முடைய முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் உணவு என்பது பெரும் பங்கு வகித்தது. அதாவது இயற்கையான சோளம் கம்பு ராகி மற்றும் அரிசி கூட வீட்டிலேயே பயிர் செய்யப்பட்டு வீட்டிலேயே கிடைக்கும் அரிசியை தான் பயன்படுத்தினார்கள். அதுவும் குறிப்பாக சாதத்தை வடித்து தான் சாப்பிட்டார்கள். சாதத்தை வடித்து சாப்பிடும் போது கிடைக்கும் கஞ்சியை குடிப்பதால் அவ்வளவு பயன்கள் இருந்தது. ஆனால், இந்த நவீன காலகட்டத்திலோ அனைவரும் குக்கருக்கு மாறி விட்டார்கள். ஒரு சில வீடுகளில் மட்டும் தான் இன்னும் வடிக்கும் சாதத்தை சாப்பிட்டு வருகிறார்கள். இந்த காலகட்டத்தில் பழைய சோறு வடித்த கஞ்சி என்றால் இந்த தலைமுறைகள் இருக்கும் குழந்தைகளும் சரி பெரியவர்களும் சரி எட்டடி பாய்ந்து ஓடி விடுகின்றனர். ஆனால் அதின் அருமை இங்கு பலருக்கும் தெரிவதில்லை. மேலும் வடித்த சாதத்தில் கிடைக்கும் கஞ்சியை குடித்தால் என்னென்ன பயன்கள் இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வடித்த சாதத்தின் கஞ்சியை குடித்தால் இறப்பை குடல் வளர்ச்சி பிரச்சினைகள் தடுக்கப்படும். அதுமட்டுமின்றி, புற்றுநோய் சம்பந்தமான வளர்ச்சி செல்களை தடுக்கலாம். மேலும், உடலின் வெப்பநிலை சராசரியாக பராமரிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இரத்தக் கட்டு வீக்கம் உள்ள இடங்களில் இந்த வடித்த கஞ்சியை கல்லுப்பு சேர்த்து மிதமான சூட்டில் ரத்த கட்டு வீக்கம் உள்ள இடங்களில் வைப்பதன் மூலம் நல்ல பலனை பெறலாம். அதுமட்டுமின்றி வடித்த கஞ்சினீரை உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் பருகலாம். அதில் உள்ள கொழுப்பு மிகவும் தன்மை கொண்டதாக இருப்பதால் உடல் எடை அதிகரிக்கும்.