ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | நோட்டாவுக்கு அதிகமான வாக்குகள்.. காரணமும் பின்னணியும்

2 hours ago
ARTICLE AD BOX
Published on: 
08 Feb 2025, 10:25 am

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி ஐந்தாம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.., வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

13வது சுற்று நிலவரப்படி, திமுக வேட்பாளர் சந்திரக்குமார், 89,931 வாக்குகளையும் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி, 19,078 வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். நோட்டாவுக்கு, 4708 வாக்குகள் விழுந்திருக்கின்றன. 13 சுற்றுக்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் நோட்டாவுக்கு விழுந்திருக்கும் வாக்குகள், 2021 பொதுத்தேர்தல், 2023 இடைத்தேர்தலில் விழுந்த வாக்குகளைவிட அதிகமாக இருக்கிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்pt

2021 பொதுத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வே.ரா, தமாகாவின் யுவராஜாவைவிட 8,904 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் நோட்டாவுக்கு 1,546 வாக்குகள் பதிவாகியிருந்தன. அமமுக வேட்பாளரைவிட, நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தது அப்போது கவனம் பெற்றது. திருமகன் ஈ.வே.ரா மறைவைத் தொடர்ந்து, 2023-ல் இடைத்தேர்தல் நடந்தது..,அப்போது காங்கிரஸ் சார்பில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசுவைவிட 60000 வாக்குகள் அதிகம் பெற்று மாபெரும் வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் நோட்டாவுக்கு, 798 வாக்குகள் விழுந்தன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : 3 ஆம் இடம் பிடித்த நோட்டா.. டெபாசிட் வாங்குமா நாதக?

இந்தமுறை, நாதக வேட்பாளர் சீதாலட்சுமியைவிட, திமுக வேட்பாளர் சந்திரக்குமார் தற்போதுவரை, கிட்டத்தட்ட முப்பதாயிரம் வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். 6வது சுற்றில், பூத் 78 வாக்கு எண்ணிக்கையின்போது, நாதக 8 வாக்குகளே பெற்ற நிலையில் நோட்டா 10 வாக்குகள் பெற்றுள்ளது.., 13 சுற்றுகளின் முடிவில் நோட்டாவுக்கு, 4708 வாக்குகள் விழுந்திருக்கின்றன. அனைத்து சுற்றுக்களும் முடியும்போது, சில நூறு ஓட்டுகள் கூடவும் வாய்ப்பிருக்கிறது.

“திமுக-விற்கு அச்சம் வந்துவிட்டது”
“திமுக-விற்கு அச்சம் வந்துவிட்டது”

அதற்கான காரணம் என்னவென்று பார்க்கும்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், ...பாஜக தலைமை தங்கள் கட்சி நிர்வாகிகள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் செய்யவில்லை...,ஆனால், அதிமுக தலைமை நோட்டாவுக்கு வாக்களிக்க தங்கள் நிர்வாகிகளை வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகின..,நாம் தமிழர் அதிக வாக்குகள் பெற்றால், அது அதிமுகவுக்கு பின்னடைவாக அமையும்..,தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சி நாங்கள்தான் என கிளைம் செய்ய ஆரம்பிப்பார்கள்..,அது அதிமுக இமேஜை காலி செய்யும்..அதேவேளை, நோட்டாவுக்கு வாக்களிக்கும் பட்சத்தில் அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்புக்கு ஆதரவாக எவ்வளவு பேர் வாக்களித்திருக்கிறார்கள் பாருங்கள் என அதைவைத்து பேசமுடியும் என்ப அதிமுகவின் கணக்கு என சொல்லப்படுகிறது..,

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
“ஈகோ பிரச்னையை தள்ளிவைத்துவிட்டு..” டெல்லி தேர்தல் முடிவுகள் தொடர்பாக திருமாவளவன்
Read Entire Article