ARTICLE AD BOX
சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கில் வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு பிரத்யேக வலைத்தள பெயர் நடைமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி வங்கிகள் தங்கள் வலைத்தள பெயர்களின் முடிவால் BANK.IN என்ற வார்த்தையை சேர்க்கவேண்டும். வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் வலைத்தள பெயர்கள் FIN.IN என்ற வார்த்தையுடன் முடிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RBIPT Web
இந்த நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் எனக்கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப் பரிமாற்றம் தொடர்பான முறைகேடுகளை தடுக்கவும் நவீன நிதிச்சேவைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது