இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 4-ல் நடைபெறுகிறது

3 hours ago
ARTICLE AD BOX

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 4ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வுகளில் ஒன்றிய அரசு நடத்தி வரும் முறைகேடுகள்! - வைகோ கண்டனம்

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகள் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த நிலையில்,  2025-26ஆம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தகுதித் தேர்வு வரும் மே மாதம் 4-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இளநிலை நீட் தேர்வுகள் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை குறிப்பிட்டுள்ளது.

இளநிலை நீட் தேர்வில் பங்கேற்க  இன்று மாலை முதல் வரும் மார்ச் மாதம் 7ஆம் தேதி இரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான கட்டணமாக பொதுப் பிரிவு மாணவர்களுக்கு ரூ.1,700ம், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.1,600ம், பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பழங்குடியின பிரிவுக்கு ரூ.1,000மும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Read Entire Article