ARTICLE AD BOX

வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் பணத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மத்திய அரசு புதிய நடவடிக்கையை எடுக்க உள்ளது. அதாவது தற்போது டிஐசிஜிசி சட்டத்தின் கீழ் வங்கி திடீரென்று இழுத்து மூடப்பட்டால் அந்த வங்கியில் ஏற்கனவே பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும். தற்போது இந்த காப்பீட்டு தொகையை அதிகரிப்பதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
ஒரு வங்கி தோல்வி அடைந்தால் அதில் டெபாசிட் செய்த மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவது தான் இதன் நோக்கம். மத்திய அரசின் இந்த புதிய முடிவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள பணத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் என கூறப்படுகிறது. டெபாசிட் காப்பீட்டு வரம்பை தற்போது உள்ள 5 லட்சத்திலிருந்து மேலும் உயர்த்துவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாக நிதி சேவைகள் செயலாளர் தெரிவித்துள்ளார். நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் சமீபத்தில் நடந்த முறைகேட்டை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும் இதற்கான அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும்.