ARTICLE AD BOX
டாக்கா,
வங்காளதேசத்தின் சமிதிபரா பகுதியில் உள்ள காக்ஸ் பஜார் விமாப்படை தளத்தில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த தொடங்கினர். இதையடுத்து விமானப்படை தளத்தில் இருந்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் உள்ளூரை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்தார். தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க கூடுதல் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வங்காளதேச ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? தாக்குதலுக்கான பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :