ARTICLE AD BOX

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. அதாவது, வங்கதேசத்திற்கும் இந்தியாவின் கொல்கத்தா, புவனேஸ்வர் இடையே உள்ள வங்கக்கடல் நடுவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
ரிக்டர் அளவில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின் படி, காலை 6:10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
EQ of M: 5.1, On: 25/02/2025 06:10:25 IST, Lat: 19.52 N, Long: 88.55 E, Depth: 91 Km, Location: Bay of Bengal.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/J6q53lzNd1
— National Center for Seismology (@NCS_Earthquake) February 25, 2025
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அருகே இருக்கும் மாநில மக்கள் சிறிது நேரம் பீதியடைந்தனர். இந்நிலையில், அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர், மக்கள் பீதி அடையத் தேவையில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.