ARTICLE AD BOX
வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி லீக் சுற்றில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் நியூசிலாந்தும், அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வங்கதேசமும் களமிறங்கியுள்ளன.
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத ரச்சின் ரவீந்திரா மீண்டும் நியூசிலாந்து அணிக்காக களமிறங்கியுள்ளார்.
மேலும், நாதன் ஸ்மித்துக்கு பதிலாக ஜேமிசனை நியூசிலாந்து அணி களமிறக்கியுள்ளது.
அதேபோல், வங்கதேச அணியில் செளமியா சர்க்காருக்கு பதிலாக முகமதுல்லாவும், தன்சிம் ஹசன் சாகிப்புக்கு பதிலாக நஹித் ரானா களமிறங்கியுள்ளனர்.
முதல் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்களுடன் வங்கதேச அணி பேட்டிங் செய்து வருகின்றது.