ARTICLE AD BOX
அரசு மருத்துவர்கள் பணி நியமனம்.. இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது.. சென்னை ஐகோர்ட் அதிரடி!
சென்னை: மருத்துவ கவுன்சில் நிரந்தர பதிவு இல்லை எனக் கூறி, அரசு மருத்துவர்கள் பணிக்கான இறுதிப் பட்டியலில் 400 மருத்துவர்களின் பெயரை நீக்கியதை எதிர்த்த வழக்கில், அரசு மருத்துவர்கள் நியமனம், இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,642 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு, மருத்துவ தேர்வு வாரியம் மூலம், கடந்த ஜனவரி 5 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து, 2,642 மருத்துவர்களின் தேர்ச்சி பட்டியலை மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டது.

இந்தப் பட்டியலில், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில், 2024 ஜூலை 15 ஆம் தேதிக்கு முன் பதிவு செய்யவில்லை எனக் கூறி, 400 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதை எதிர்த்து மருத்துவர் சாய் கணேஷ் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த மனுக்களில், 2024 ஜூலை 15 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பித்தும், பதிவு செய்யப்படாத நிலையில், தற்காலிக பதிவுச் சான்றிதழை வைத்து அரசு உதவி மருத்துவர் தேர்வுக்கு விண்ணப்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மருத்துவ பல்கலைக்கழகம், சான்றிதழ்கள் வழங்க காலதாமதம் செய்ததால், நிரந்தரப் பதிவு சான்றிதழ் பெற முடியதாதற்கு பல்கலைக்கழகம் தான் காரணம் என்பதால், தங்களுக்கும் பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும், இறுதிப் பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணை வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி, மனுதாரர்களும் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தான். சான்றிதழ் சரி பார்ப்புக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவு இருந்தால் போதுமானது எனக் கூறப்பட்டிருந்தது. தற்போது தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிப்ரவரி 26 ஆம் தேதி பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட உள்ளதாக வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், பணி நியமன உத்தரவுகள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனக்கூறி விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.
- சிக்கிய சீமான்! நடிகை விஜயலட்சுமியை சீரழித்த வழக்கு-விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்? அடுத்து கைது?
- நியோமேக்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.1,671 கோடி சொத்துகள்.. முதலீட்டாளர்களுக்கு ஐகோர்ட் குட்நியூஸ்
- முன்கூட்டியே விடுதலை.. விதிகளை மறுஆய்வு செய்யவேண்டும்.. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அட்வைஸ்
- சீனாவிடமிருந்து வந்த நல்ல செய்தி.. இனி தங்கம் விலை "இப்படி" தான்! ஒரே போடாக போட்ட ஆனந்த் சீனிவாசன்
- நிலம், வீடு வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி.. கிரைய பத்திரம், பட்டா வேணுமா? இந்த தேதியை நோட் பண்ணுங்க
- திருப்பூரில் மகனுடன் சாப்பிட்ட மாலா.. அடுத்த நொடி நடந்த சம்பவம்.. அதிர்ந்து போன அக்கம் பக்கம்
- சொல்லித் தான் பாருங்க பார்ப்போம்..! வரி தர முடியாது என்றால் 356 பாயும்.. திமுகவை மிரட்டும் பாஜக.!
- அப்பா ஆகப் போகிறார் பிக்பாஸ் ஷாரிக்.. குழந்தை குறித்து உருக்கமாக வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்து
- முட்டுக்கட்டையா போடுறீங்க? அமெரிக்காவை கழற்றிவிடும் இந்தியா? ரஷ்யாவுடன் சேர்ந்து செய்யும் சம்பவம்
- ஏடிஎம்மில் பணம் எடுக்க போன கோவை பெண்.. பான் கார்டில் பல கோடி... நினைத்து பார்க்க முடியாத ட்விஸ்ட்
- மாத்திரை அட்டையில் ஒரு சிவப்பு நிற கோடு இருக்குமே! அது ஏன் தெரியுமா? XRx என்றால் என்ன?
- இந்தி எதிர்ப்பா? கருணாநிதி எதிர்த்தார்..1991 திமுக ஆட்சியை டிஸ்மிஸ் பண்ணிட்டோம்! எச்சரித்த சு.சுவாமி