ARTICLE AD BOX
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசிப் பெருவிழா மார்ச் 03 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசிப் பெருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு மாசிப் பெருவிழா மார்ச் 3 முதல் மார்ச் 14 வரை நடைபெறுகிறது.
விழா நாள்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதி உலா வருவார்கள். திருவிழாவின் பத்தான் நாள் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 12 புதன்கிழமை காலை நடைபெறுகிறது.
முதலில் பிள்ளையார் தேரும், சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வருவார்கள். அதன்பின் தெய்வானை அம்மன் தேரில் எழுந்தருளி வீதிஉலா நடைபெறும். தேரோட்டத்தில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.
விழாவின் பதினொன்றாம் நாளான மார்ச் 13ல் இரவு 10 மணியளவில் தெப்ப உற்சவம் நடைபெறும் அபிஷேகம் அலங்காரமாகி சுவாமி தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றிவருவார்கள்.