அதிக இணைய முடக்கங்களை சந்தித்த நாடு எது? 2வது இடத்தில் இந்தியா!

3 hours ago
ARTICLE AD BOX

2024ஆம் ஆண்டில் அதிக இணைய முடக்கங்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆக்செஸ் நவ் (Access Now) என்ற லாபநோக்கற்ற தன்னார்வ அமைப்பு, அதிக இணைய முடக்கங்களை சந்தித்த நாடுகளின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

இதில் 2024-ல் அதிக இணைய முடக்கங்களை சந்தித்த நாடு மியான்மர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் 85 முறை இணைய முடக்கம் அங்கு நடந்துள்ளது.

இதற்கு ஒருமுறை குறைவாக, 84 முறை இந்தியாவில் இணைய முடக்கம் நடந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. பாகிஸ்தானில் 21 முறை. பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக ரஷியா உள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக கருதப்படும் இந்தியாவில், 84 முறை இணைய முடக்கம் நடந்துள்ளது இதுவே முதல்முறை.

இந்தியாவில் 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அதிகமுறை இணைய முடக்கத்தை சந்தித்துள்ளன.

இதில் மணிப்பூர் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 21 முறை இணைய முடக்கம் நடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜம்மு - காஷ்மீர் (12), ஹரியாணா (12) முறை இணைய முடக்கம் நடந்துள்ளன.

இந்தியாவில் 84 முறை இணைய சேவை முடக்கப்பட்டதில், 41 முறை போராட்டத்தால் மட்டுமே நடந்துள்ளது. 23 முறை வகுப்புவாத வன்முறையால் நடந்துள்ளது.

இதையும் படிக்க | 4 ஆண்டுகளாக ஊதியமில்லை! செலவுக்காக இரவுச்சாலையோர உணவகத்தில் பணியாற்றும் ஆசிரியர்!

Read Entire Article