ARTICLE AD BOX
இளம் பெண்கள் முதல் நடுத்தர வயது பெண்கள் வரை லிப் பாம்களை அதிகம் உபயோகிக்கிறார்கள். லிப்ஸ்டிக் உபயோகிக்காத பெண்கள் கூட லிப் பாம் உபயோகத்தை விரும்புகிறார்கள். ஏனென்றால் லிப் பாம் உதடுகளை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. சுருக்கங்கள் இல்லாமல் இருக்க உதவி செய்கிறது.
லிப் பாமின் பயன்கள்;
ஈரப்பதமான உதடுகள்;
லிப்ஸ்டிக்குகள் அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது. முகத்திற்கு நன்கு மேக்கப் செய்து கொள்ளும் பெண்கள்தான் லிப்ஸ்டிக் உபயோகிக் கிறார்கள். ஆனால் லிப் பாம் அழகு சாதன பயன்பாட்டிற்கு அல்லாமல் உதடுகளின் ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.
லிப்ஸ்டிக் உபயோகிக்கும்போது அது உதட்டில் உள்ள ஈரப்பதத்தை அகற்றிவிடுகிறது. அதேசமயம் லிப் பாம்கள் உதடுகளை ஈரப்பதமாக வைக்கிறது. வறட்சி அடைய செய்யாமல் இருக்க உதவுகிறது.
உதட்டு பளபளப்பு;
லிப் பாம்களில் பெட்ரோலியம் ஜெல்லி, ஷியா வெண்ணை மற்றும் லானோலின் போன்ற நீரிழப்பை தடுக்கும் பொருள்கள் உள்ளன. எனவே லிப் பாம்களை உதடுகளில் பூசிக்கொள்ளும்போது பளபளப்பைத் தருகிறது. உதட்டில் எரிச்சல் மற்றும் சுருக்கம் இல்லாமல் காக்கிறது. சுற்றுப்புற சூழ்நிலைகளில் இருந்து ஈரப்பதம் அல்லது வெப்பம் போன்றவை தாக்காமல் தடுக்கிறது. பல லிப் பாம்களில் கற்பூரம் மற்றும் மெந்தோல் கலந்திருக்கின்றனர். அவை உதடுகளை குளிர்ச்சியாக வைக்கின்றது.
உதட்டு சுருக்கங்களை நீக்கும்;
50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கொலாஜன் உற்பத்தி குறைந்து அவர்களுடைய முகத்தில் உள்ள சருமமும் உதடுகளும் சுருங்கி போகும். உடலின் மற்ற பகுதிகளில் உள்ள தோலை போல அல்லாமல் உதடுகளில் ஈரப்பதத்தை தக்க வைக்க எண்ணை உற்பத்தி செய்யும் சுரப்பிகள் இல்லை.
எனவே கடுமையான காற்றுக் காலம், பனிக்காலம் போன்ற தட்பவெப்பம் நிலவும் சூழ்நிலைகளில் உதடுகளில் விரிசல் ஏற்பட்டு சருமம் உரிந்து போகும். சிலருக்கு கடுமையாக சருமம் உரிந்து ரத்தம் கூட வரலாம். ஆனால் லிப்பாம்கள் உதடுகளை ஈரப்பதமூட்டி வறட்சியை நீக்கிறது.
லிப் பாமில் உள்ள அல்ட்ரா ஹைட்ரடிங் மூலப்பொருளில் விட்டமின்கள் ஏ, சி மற்றும் இ உள்ளன. இதனால் முன்கூட்டியே வயதான தோற்றத்தை தடுக்கிறது. செல் மீள் உருவாக்கத்திற்கு உதவுகிறது. எனவே லிப்ஸ்டிக்கை உபயோகிப்பதை விட லிப் பாம்கள் நன்மையே செய்கின்றன. ஆனால் நல்ல தரமான லிப் பாம்களை வாங்கி உபயோகிப்பது மிகவும் முக்கியம்.