சிவகுமாரின் அதிர்ச்சி கருத்து: நாம் பேசுவது உண்மையான தமிழே அல்ல!

2 hours ago
ARTICLE AD BOX

திருவண்ணாமலையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும்  பொது நூலக இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட புத்தக திருவிழாவில் சிவகுமார் பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் அப்போதைய முன்னணி நடிகர் சிவகுமார். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் இருந்த காலத்தில் இளம் நடிகராகவும், அவர்கள் திரைத்துறையிலிருந்து மெல்ல விலகும் நேரத்தில் முன்னணி நடிகராகவும் வலம் வந்தவர் சிவகுமார். சிவகுமார் முதன்முதலில் சிவாஜியின் ஓவியத்தை வரைந்து அவரிடம் பாராட்டைப் பெற்றிருக்கிறார். அதன்பின்னரே சிவாஜி திரைப்படங்களுக்கு ஓவியம் வரையும் மோகன் ஆர்ட்ஸ் என்ற வரை கலைப்பயிலகத்தில் சேர்த்துவிட்டார்.

அங்குதான் அவரின் பயணம் ஆரம்பித்தது. பின்னர் 'காக்கும் கரங்கள்' என்ற படத்தில் அறிமுகமாகி, பின்னர் சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற பிரபல நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். அன்னக்கிளி, ஆட்டுக்கார அலமேலு, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்து பைரவி போன்ற சூப்பர்ஹிட் படங்களில் நடித்து தென்தமிழகத்தின் மார்கண்டேயன் என்று புகழப்பட்டார். தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பட்ட நாடகங்களிலும் நடித்தார். இவர் நடித்த எத்தனை மனிதர்கள், கையளவு மனசு சீரியல்கள் தூர்தர்ஷனில் மெஹா ஹிட் ஆனது.

இதையும் படியுங்கள்:
பெற்றோர்கள் குழந்தையின் முன் வாக்குவாதம் செய்வதால் ஏற்படும் 7 ஆபத்தான விளைவுகள்!
Sivakumar

ஹீரோவாக நடித்து பின், குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர், பின்னர் முழு வேலையாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் சில காரணங்களால் அதிலும் நடிப்பதை நிறுத்துவிட்டார்.

தற்போது குடும்பமாக சேர்ந்து educational trust நடத்தி வருகிறார்கள். குறிப்பாக சிவகுமார் பல பொது சேவைகளை செய்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் கோவிலுக்கும் சிவராத்திரிக்கும் என்ன தொடர்பு? வேடன் கதை...
Sivakumar

சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரும் இணைந்து நடத்தும் அகரம் ஃபௌன்டேஷனின் கட்டடம் சமீபத்தில் திறக்கப்பட்டது. தரமான கல்வியை வழங்க 2006ம் தேதி தொடங்கப்பட்ட இந்த இயக்கமானது தற்போது பெரிய அளவில் விரிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படி குடும்பமே பொது சேவை செய்து வருகிறது.

அந்தவகையில் திருவண்ணாமலையில் நடந்த புத்தக கண்காட்சியில் பேசியிருக்கிறார். அப்போது கலைஞர் எழுதிய ஒரு பாடல் வரிகளை பாடி, அந்தப் பாடல் தமிழில் எழுதப்பட்டதாக கூறி, தற்போது நாம் பேசும் தமிழ் உண்மையில் தமிழே அல்ல என்று பேசியிருக்கிறார்.

Read Entire Article