லாவண்யா திரிபாதி நடிக்கும் 'சதிலீலாவதி' படத்தின் புதிய அப்டேட்

3 days ago
ARTICLE AD BOX

சென்னை,

தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ள லாவண்யா திரிபாதி, தமிழில் 'பிரம்மன்' படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து பிரபலமானார். அதனைத்தொடர்ந்து 'மாயவன்', 'தணல்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2023-ம் ஆண்டு லாவண்யா திரிபாதிக்கும், தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகனும் நடிகருமான வருண் தேஜுக்கும் திருமணம் நடந்தது.

சமீபத்தில் லாவண்யா திரிபாதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. அதன்படி, தாதினேனி சத்யா இயக்கும் இப்படத்திற்கு 'சதிலீலாவதி' எனப்பெயரிடப்பட்டுள்ளது. 'சகுந்தலம்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான மலையாள நடிகர் தேவ் மோகன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கி இருந்தது. இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. மேலும், இப்படத்தை கோடையில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Read Entire Article