ARTICLE AD BOX
லல்லு பிரசாத் யாதவின் மகனுக்கு பிகார் போக்குவரத்து காவல்துறை ரூ.4,000 அபராதம் விதித்துள்ளது.
லல்லு பிரசாத் யாதவின் மூத்த மகனும் முன்னாள் சுகாதார அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் சனிக்கிழமை பாட்னாவில் உள்ள பிகார் முதல்வரின் இல்லத்திற்கு வெளியே ஹோலி கொண்டாடினார். அப்போது இருசக்கர வாகனத்திலும் பயணம் மேற்கொண்டார். இதுதொடர்பான விடியா இணையதளங்களில் வைரானது.
இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணம் மேற்கொண்டதாக தேஜ் பிரதாப் யாதவ் மீது புகார் எழுந்தது. இந்த புகாரையடுத்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ததாக அவருக்கு எதிராக பிகார் போக்குவரத்து காவல்துறை ரூ.4,000 அபராதம் விதித்துள்ளது.
தமிழ்நாட்டிலேயே தேர்வர்களுக்கான மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்- இபிஎஸ்
மேலும் அவர் பயணித்த இருசக்கரவாகனத்தின் காப்பீடு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழும் காலாவதியாகியிருந்தது என்று போக்குவரத்து காவல்துறை அதிகாரி பிரஜேஷ் குமார் சௌகான் தெரிவித்துள்ளார். இதனிடையே தேஜ் பிரதாப் யாதவின் மெய்க்காப்பாளர் பணியில் இருந்து காவலர் தீபக் குமார் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டார்.
எம்எல்ஏ தேஜ் பிரதாப் யாதவின் அறிவுறுத்தலின் பேரில் அவர் பொதுஇடத்தில் நடனமாடியதாகக் கூறப்படும் பிடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து பிகார் காவல்துறை அவர் மீது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.