ARTICLE AD BOX
வார ராசி பலன்: துலாம், விருச்சிகம், தனுசு அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசி எது?.. உங்க ராசி இருக்கா
வார ராசி பலன்: மார்ச் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை பங்குனி மாதம் நடைபெறவுள்ளது. அந்த வகையில், பங்குனி மாதத்தில் மார்ச் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
மார்ச் மாதத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். இந்த கிரகங்களில் பெயர்ச்சி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஒவ்வொரு ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், மார்ச் மாதத்தில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனி பகவான் சில ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தரப்போகிறார். மாதத்தில் சிறந்த மாதமான பங்குனி மாதம் தற்போது தொடங்கியுள்ளது. பங்குனி மாதத்தில் மார்ச் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம்: துலாம் ராசிக்கு அனுகூலமான காலகட்டமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நன்மைகள் கிடைக்கும். செல்வாக்கு கூடும். தொட்டதெல்லாம் துலங்கும் காலகட்டமாக இருக்கும். ராகவேந்திரர் வழிபாடு நல்ல நன்மைகளைத் தரும். ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். இடதுபக்க தேக ஆரோக்கியத்தில் பிரச்சனை இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. தொழில் ரீதியாக இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
யோக பலத்தை அதிக அளவில் பெறக் கூடியவர்கள் துலாம் ராசியினர். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் நீங்கும். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பதற்றம் குறையும். முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல் தீரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகம் கூடும். பணவரவு, பயணங்கள், திட்டமிடுதல், குடும்பத்தில் நிம்மதி, வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, புனரமைப்பு, பொருள் சேர்க்கை உண்டாகும். நகை ஆபரணங்களை வாங்கி குவிப்பீர்கள்.
ஆச்சரியத்தக்க முன்னேற்றம் ஏற்படும். நீண்டநாள்களாக உடலில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு நல்ல மருந்து, மருத்துவர் கிடைக்கும் யோகம் உண்டாகும். கலைத் துறையினர், சினிமா துறையினர், படைப்பாளிகள், மீடியா துறையினர், இசைத் துறையினருக்கு விருது கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.
விருச்சிகம்: விருச்சிகத்துக்கு துர்கை வழிபாடு அனுகூலத்தை தரும். துர்கை கவசம், துர்கை காயத்ரி சொல்வது நற்பலன்கைளத் தரும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். மன அழுத்தம் உண்டாகும். பிள்ளைகளிடம் தேவையில்லாமல் சண்டை போடுவதை தவிர்க்க வேண்டும். லாபம், அனுகூலம், தொழில் ரீதியான முன்னேற்றம் உண்டாகும். பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் வாங்கும், விற்கும் யோகம் உண்டாகும். தடைகள் தவிடு பொடியாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். நீண்டநாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும், வாகனம் ஓட்டும்போது கவனமாக இருப்பது நல்லது. யாரிடமும் சண்டை போடாமல் இருப்பது நல்லது. நட்பு, உறவு, குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பணவரவு உண்டாகும். பதவி உயர்வு உண்டாகும். முதலாளிகள் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை கொடுப்பார்கள்.
தனுசு: பிள்ளையார் வழிபாடு அனுகூலத்தை தரும். காரியசித்தி மாலை கேட்பது நல்லது. தாய் வழி, தந்தை வழி உறவு, குலதெய்வம், பூர்வீகம் போன்றவற்றுக்கு பயணம் மேற்கொள்வீர்கள். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். அசையும், அசையா பொருள் சேர்க்கை ஏற்படும். பணவரவில் இருந்து வந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். முதலீடுகளுக்கு குறை வராது.
ஆச்சரியமான காலகட்டமாக இருக்கும். அடுத்தடுத்து வேலைகளை செய்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். நம்பிக்கை, தைரியம் உண்டாகும். பதற்றம் படிப்படியாக குறையும், வண்டி, வாகன மாற்றத்தில் சந்தோஷம் ஏற்படும். வாகனத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். தொழில் ரீதியாக அனுகூலமான காலகட்டமாக இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
புதிய முயற்சிகள் அனுகூலத்தை தரும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். சோம்பல் அதிகரிக்கும். எழுந்தவுடன் ஆயில் புல்லிங், உடற்பயிற்சி செய்வது நல்லது. சனியின் நிலை மாறுவதால் இதனை செய்வது நல்ல பலன்களைத் தரும். தொழில், உத்தியோகம், வேலை, படிப்பில் வரும் மாற்றங்களை பயன்படுத்திக் கொள்வது நல்லது. ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
- நல்ல செய்தி வந்தாச்சு! தங்கம் விலை என்னவாகும்? பணம் கொட்ட போகுதாம்! ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க
- ஆடு வளர்ப்பது அழகு பார்க்க கிடையாது.. பாகிஸ்தானியர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்த டிரம்ப்!
- குண்டுமணி அளவு தங்கமாவது வாங்கி வைங்க.. வேண்டாத வேலை பார்த்த ட்ரம்ப்! இனி தொடர்ந்து உச்சம் தானாம்!
- இறங்கியடித்த நம் உளவுத்துறை.. வங்கதேச ராணுவ தளபதியை முடிக்க நினைத்த பாகிஸ்தானுக்கு விழுந்த அடி- மாஸ்
- சிறகடிக்க ஆசை: மீனாவிடம் சிந்தாமணியின் கணவர் சொன்ன வார்த்தை.. விஜயாவை மாட்டி விட்ட முத்து.. செம சம்பவம்
- Thengai Poo: "தேங்காய் பூ தேங்காய் பூவு"னு கூவி கூவி விற்பாங்களே! அந்த பூ உடல் எடையை குறைக்குமாமே!
- பழைய ஓய்வூதிய திட்டம்.. கைவிரித்த தங்கம்.. அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு
- குருப்பெயர்ச்சி: ராஜயோகம் பெறும் 3 ராசியினர் யார் தெரியுமா?.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
- பங்கு சந்தையில் பணம் போட்டவர்களும், தங்கத்தில் பணத்தை போட்டவர்களும்.. அடுத்தடுத்து நடந்த ட்விஸ்ட்
- புக் செய்த சீட்டை ஆக்கிரமித்த பயணிகள்! பெங்களூர் ஐடி ஊழியர் செய்த தரமான செயல்.. ரயில்வேக்கு தேவைதான்
- அசத்துதே அரசு கேபிள்..தூக்கி வீசப்படும் தனியார் செட்டாப் பாக்ஸ்கள்! அடடே வருதே IPTV.. செம அறிவிப்பு
- பிந்துகோஷ் கடைசி நொடிகள்.. பங்களா, 10 நாய், கார்.. அப்படி வாழ்ந்தாங்களே பிந்து கோஷ்.. பெஸ்ட் டான்சர்